காரைக்குடியில் நடைபயிற்சியின் போது சாலையில் சந்திக்கும் பொதுமக்களுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்வித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சிவகங்கை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். காரைக்குடி செஞ்சை பகுதியில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார், என்பது குறிப்பிடதக்கது. காரைக்குடி நடராஜா தியேட்டர் ஆனந்தமடம் முதல் போலீஸ் பீட் பழைய பேருந்து நிலையம் வழியாக கோவிலூர் வரை நடை பயிற்சியில் ஈடுபட்டார். அப்பொழுது சாலையில் சந்திக்கும் பொதுமக்களுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்வித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் சென்றார். அவர் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, அங்கிருந்த தேனீர் கடையில் தேனீர் அருந்தி உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
மிதிவண்டிய உதயநிதி ஸ்டாலின்
நேற்று காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ – மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025 - 2026, சிறந்த பள்ளிகளுக்கான விருது 2024 - 2025 மற்றும் குழந்தைகள் தின விழாவில் தமிழ்நாடு முழுவதும் 2025- 2026 ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு பயிலும் 5,34,017 மாணவ, மாணவியருக்கு 241 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 1,448 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.