உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

 





மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி - வாலகுருநாதர் திருக்கோவில். இந்த கோயிலில்  மார்கழி பௌர்ணமி ஆருத்ரா தரிசன வைபோகத்தை முன்னிட்டு கோயிலின் நிர்வாக கமிட்டியினர் மற்றும் உசிலம்பட்டி சங்கர் சங்கீத வித்யாலயா குழு சார்பில் பள்ளி மாணவியர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.




 

7 வயது முதல் 14 வயது கொண்ட மாணவியர்கள் என சுமார் 13 பேர் கலந்து கொண்டு பல்வேறு பரத நாட்டிய பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆடி அரங்கேற்றம் செய்தனர். இந்த பரத நாட்டிய அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உசிலம்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன். அரங்கேற்றத்தில் கலந்து கொண்ட அனைத்து மாணவியர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.