தமிழக, கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டமான தேனி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதிலும் நெல், வாழை, தென்னை, திராட்சை உள்ளிட்டவைகள்  அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.  குறிப்பாக வாழை விவசாயத்தில் நேந்திரம், பூவன், பச்சை, செவ்வாழை உள்ளிட்ட ரகங்கள் அதிகமாக பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர் . மேலும் தேனி மாவட்ட மக்கள் கம்பத்தை மையமாக வைத்து அருகில் உள்ள கேரள மாநிலத்திற்கு வாழைகளை அதிகளவில் ஏற்றுமதி  செய்து வருகின்றனர்.


Breaking News Live: நரிக்குறவர் பெண்ணின் வீட்டிற்கு சென்று சாப்பிட்ட முதல்வர்..! குழந்தைக்கு ஊட்டிவிட்டு மகிழ்ச்சி..!




குறிப்பாக கம்பத்தில் இருந்து அதிக அளவில் தூத்துக்குடி மற்றும் கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் மூலம் கப்பல் துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளான துபாய், ஈரான் போன்ற நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகிறது. விவசாய நிலங்களை பொறுத்தவரையில் தேனி மாவட்டத்தில் 1.48 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் உள்ளது. இதில் 1,35,507 ஹெக்டேர் புன்செய் நிலமும், 13,822 ஹெக்டேர் நன்செய் நிலமும் உள்ளன. நெல் சாகுபடி 1.27 லட்சம் ஹெக்டேரில் செய்யப்படுகிறது. இருபோக சாகுபடி 15 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நடக்கிறது.




சோளம் 9 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலும், கம்பு 3,300 ஹெக்டேர் பரப்பிலும், பயறு வகைகள் 4,600 ஹெக்டேர் பரப்பிலும், எண்ணெய் வித்துக்கள் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலும், பூக்கள் 500 ஹெக்டேர் பரப்பிலும், பருத்தி 3200 ஹெக்டேர் பரப்பிலும் பயிரிடப்பட்டுள்ளன. பருவமழை நன்கு பெய்து அணைகள், கண்மாய்களில் நீர் இருப்பு அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து கிணற்று பாசன பரப்பு 30 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.


ABP NADU 2nd Year ceremony : தொடர்ந்து பயணிப்போம்! இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஏபிபி நாடு..!




தற்போது கோடை மழையும் அதிக அளவு பெய்து வருதால் விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்தாண்டு அதிக விலை கிடைப்பதால் பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் வாழை சாகுபடி அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில் தென்னை பயிரிடும் பரப்பு 500 ஹெக்டேர் அதிகரித்துள்ளது. வாழை சாகுபடி பரப்பு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. காய்கறிகள், பயறு, எண்ணெய் வித்துக்கள் பயிரிடுவதிலும், மா, தென்னை, வாழை, முருங்கை போன்ற தோட்டப்பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண