திண்டுக்கல் நகரின் மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் சுற்றியுள்ள வெள்ளோடு, சிறு நாயக்கன்பட்டி, சின்னாளப்பட்டி, பெருமாள்கோவில் பட்டி, கலிக்கம்பட்டி, அதிகாரிப்பட்டி உட்பட பல கிராமங்களில் மல்லிகைபூ, ஜாதிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், சம்மங்கி, செவ்வந்தி, ரோஸ், வாடாமல்லி போன்ற பூக்கள் பயிர் செய்யப்படுகின்றது.


துணை முதல்வர் மீதான புகார் - வழக்கறிஞரிடம் சைபர் கிரைம் நேரில் விசாரணை




இங்கு விளைகின்ற பூக்களை திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு நாள்தோறும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இங்கிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம். இங்கிருந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 15 டன் பூக்கள் வரை விற்பனைக்கு வியாபாரி வாங்கி செல்வார்கள்.


நாளை  ஆயுத பூஜையை முன்னிட்டு  திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 10.10.24 பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன் ரூ.500க்கு 700 விற்பனையான மல்லிகை பூ தற்பொழுது 1000க்கு விற்பனை ஆகிறது. குறிப்பாக அரளிப்பூவின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு பை ரூபாய் 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட அரளிப்பூ மல்லிகைப்பூ விலைக்கு ஈடாக ஒரு கிலோ ரூபாய் 900 க்கு விற்பனையாகிறது.




வரத்து குறைவு காரணமாக தோட்டங்களில் நேரடியாக ஒரு பை ரூபாய் 700 க்கும் மலர் சந்தையில் ரூபாய் 900 க்கும் விற்பனையானது . ரோஜா பூ கிலோ ரூபாய் 200க்கும், நாட்டுச் சம்பங்கி கிலோ ரூபாய் 400க்கும், செவ்வந்தி ரூபாய் 200க்கும் விற்பனையானது. வாடாமல்லி, கோழி கொண்டை, துளசி உள்ளிட்ட  மாலை கட்டும் அனைத்து பூக்களுக்கும் நல்ல விலை கிடைத்தது  வரத்து குறைந்த போதிலும் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


TN Entrepreneur : தொழில்முனைவோராக மாற ஆசையா? ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேரலாம்: அரசு அழைப்பு




’நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுகதான்; ரத்துசெய்ய எதுவுமே செய்யவில்லை’- ஈபிஎஸ் தாக்கு


இந்த புரட்டாசி  மாதத்தில் கல்யாணம், காதுகுத்து போன்ற சுப விசேஷப் மாதம் இல்லை என்ற காரணத்தினால் வீழ்ச்சி அடைந்த காணப்பட்ட பூக்களின் விலை ஆயுத பூஜையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை உயர்ந்து உள்ளது என்று  வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்களின் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மற்றும்  வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலர் சந்தையில் களை கட்டிய ஆயுத பூஜை மலர்கள் விற்பனையால் மாலை நேரத்தில் மலர்களுக்கு கடும் கராக்கி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மலர் சந்தையில் அதிகாலை முதலே வியாபாரிகள்  குவிய தொடங்கியதால் பூக்களை வாங்குவதற்கு கடும் போட்டி ஏற்பட்டது.