கல்விக்கு அதிபதியாக இருப்பவர் சரஸ்வதி என்று நம்பப்படுகிறது. விஜய தசமி நாளில் சரஸ்வதியை வழிபட்டு முதன்முதலில் படிப்பை தொடங்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்வுகள் நடைபெறும். முந்தைய நாள் ஆயுத பூஜை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொல்லாடல் இருக்கிறது. தொன்மையான விசயங்களில் ஒன்று தொழில் செய்வதற்கு, உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் ஆயுதங்களை பூஜித்து வழிபடுவது. இது பழங்காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது. 






இன்று 23-ம் தேதி திங்கள்கிழமையும் நாளை (24.10.2023) விஜய தசமியும் கொண்டாடப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30க்குள் பூஜை செய்ய நல்ல நேரம் என ஜோதிட நிபுணர்கள் சொல்கின்றனர். மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனை தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும். ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும், பார்வதி தேவிக்கும், லக்‌ஷ்மி தேவிக்கும் தான் முக்கியத்துவம். இந்நிலையில்  ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகங்கையில் வாட்டர் சர்வீஸ் செய்வதற்கு டோக்கன் முறையில் காத்திருந்து உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை வாட்டர் சர்வீஸ் செய்து கொள்கின்றனர்.




சிவகங்கையில் பொது மக்கள் தாங்கள் பயன்படுத்தும் இரு, நான்கு சக்கர வாகனங்களை சுத்தம் செய்ய சர்வீஸ் ஸ்டேசன்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். அதிகளவில் இரு, நான்கு சக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்ய குவிக்கப்பட்டதால் அனைத்து சர்வீஸ் ஸ்டேசன்களுமே சர்வீஸ் செய்ய முடியாமல் திணறி வருவதுடன் இரு, நான்கு சக்கர வாகனங்களை சர்வீஸ் செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நேரம் ஒதுக்கி டோக்கன் போட்டு தருகின்றனர் சர்வீஸ் ஸ்டேசன் ஊழியர்கள். ஒவ்வொரு சர்வீஸ் ஸ்டேசன்களிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் குவிந்து கிடப்பதால் அப்பகுதி முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.




அதே சமயம் சிவகங்கையில் பூக்கள், கடலை பொறி, பழங்கள் விலை உள்ளிட்டவை விலைகள் அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவிலான பொருட்கள் மட்டுமே வாங்குவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். வியாபாரி ராஜா நம்மிடம் கூறுகையில், “விலைவாசி அதிமாகிவிட்டது. கடந்தாண்டு ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான பேரிக்காய் இந்தாண்டு 3 ஆயிரத்திற்கு உயர்ந்துள்ளது. இப்படி எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் வியாபாரம் மிகவும் குறைந்து விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.


மேலும் ஆன்மீக செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: நவராத்திரி 8-வது நாள் விழா: மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்!


மேலும் க்ரைம் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - காவல் நிலையம் அருகிலேயே கஞ்சாவுடன் போதை மாத்திரைகள் விற்பனை - உசிலம்பட்டியில் அதிர்ச்சி