தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 19 வார்டுகள் உள்ளன. இந்த 19 வார்டுகளில் 13 அதிமுக கவுன்சிலர்கள், 6 திமுக கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த ஊராட்சி மன்ற தலைவராக ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் மகாராஜனின் உடன் பிறந்த சகோதரர் லோகி ராஜன் என்பவர். இவர் அதிமுக சார்பாக ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒன்றியக்குழு தலைவராக இருந்து வருகிறார்.

Continues below advertisement

Paris Olympics 2024:ஒலிம்பிக் ரசிகர்களே அலார்ட்.. இந்தியாவிற்கான ஹாக்கி போட்டிகள் எப்போது!முழு டேட்டா இதோ

Continues below advertisement

ஆண்டிபட்டி ஊராட்சி மன்ற கூட்டமானது கடந்த 178 நாட்களாக நடைபெறவில்லை எனக்கூறி ஒன்றியக்குழு தலைவருக்கான தகுதி குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படவேண்டும். நம்பிக்கையில்லா தீர்மாணம் கொண்டு வரவேண்டுமென்ற ஒரு  புகார் மனுவை ஆண்டிபட்டி திமுக கிழக்கு ஒன்றிய குழு செயலாளராக இருந்து வரும் வார்டு கவுன்சிலர் ராஜாராம் என்பவர் தேனி மாவட்ட ஆட்சியர்குக்கு புகார் மனுவாக கொடுத்தார்.

Paris Olympic: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அதிக வயது, இள வயது இந்தியர் யார்? யார்? ஓர் அலசல்

அந்த புகார் மனுவின் அடிப்படையில் பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன் தலைமையில் ஆண்டிபட்டி ஊராட்சி மன்ற கூட்டரங்கில் புகார் மனு மீதான விசாரணை  நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  அனைத்து வார்டு கவுன்சிலர்கள் முன்னிலையில் ஆண்டிபட்டி ஒன்றிய கூட்டரங்கில்  கூட்டமானது நடைபெற்றது. கூட்ட அரங்கில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் கதவுகள்  பூட்டப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Deadpool & Wolverine Review: அட என்னப்பா இப்படி பண்றாங்க! டெட்பூல் & வோல்வரின் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

விசாரணையின் போது தொடர்ந்து 178 நாட்களாக ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தை நடத்தாமல் கால தாமதம் செய்த ஒன்றியக்குழு தலைவர் மீது தகுதி நீக்கம்  செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் அதிமுக ஒன்றியக்குழுத் தலைவர் லோகிராஜனுக்கு எதிராக கவுன்சிலர் ராஜாராம் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அனைத்து வார்டு கவுன்சிலர்களில் மெஜாரிட்டி காட்ட முடியாத சூழலில் 6  திமுக கவுன்சிலர்களில் 5 பேர் அதிமுக ஒன்றிக்குழு தலைவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கூட்டம் நடைபெற்றதற்கு பின்னர் இறுதிகட்ட அறிக்கையை துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோட்டாட்சியர் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இருக்கும் ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜனின் உடன் பிறந்த சகோதரர் லோகிராஜன்  என்பதும், கடந்த சட்டப்பேரவை தேர்தலில்  மகாராஜனும், லோகிராஜனும் எதிரெதிரே திமுக, அதிமுகவில் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டதும், அதில் திமுக சார்பில் மகாராஜன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.