தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு பிரச்னை மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்தி வருகிறது.  


தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கர்நாடக மாநிலத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கர்நாடகாவில் கன்னட விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைத் திறந்துவிடக் கூடாது என போராட்டம் நடத்தின


 






பெங்களூருவில் ஏற்கனவே நடைபெற்ற பந்த் போராட்டத்தின் போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்து இழிவான செயல்களை கன்னட அமைப்புகள் செய்தன. இதற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் காவிரி நீரை திறந்துவிடக் கோரி மதுரை கே.புதூர் பேருந்துநிலைய பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் சாட்டை துரை முருகன் தலைமை வகித்தார்.




சாட்டை துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடகாவையும் அதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி நீரை தர மறுக்கின்றனர்.

 

ஒரு விநாடிக்கு 3000 கன அடி நீரை தண்ணீரை திறந்துவிடுங்கள் எனக் கூறியும், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட தரமறுப்பது கன்னட இனவெறியா இல்லையா என்பதுதான் எங்களின் கேள்வி. கர்நாடகவில் காங்கிரஸ் ஆளுகிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற பணி செய்தார். ஆனால் அவரை அவமதிப்பு போல் செய்கின்றனர். 

 

தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது எங்களுக்கு பல்வேறு முரண் இருந்தாலும் அவரை அவமதிப்பை பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழகத்தின் பிரதிநிதியாக அவரைப் பார்க்கிறோம். அதனால் முதல்வரை அவமதித்தால் நாம் தமிழர் தம்பிகளுக்கு வலிக்கிறது. கர்நாடகவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு கிளப்பி வெளியேற செய்தனர். ஆனால் இங்கு நடிகர் சங்கமும், தமிழ்நாடு அரசும் வேடிக்கை பார்க்கிறது. திமுக ஏன் காவிரி பிரச்சினையில் காங்கிரஸை பார்த்து நடுங்குகிறது என்று தெரியவில்லை.

 

தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடவில்லை என்றால் மிகப்பெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி  முன்னெடுப்போம். ஜல்லிக்கட்டு உரிமைக்கு எந்த மதுரையில் இருந்து போராட்டத்தை முன்னெடுத்தோமோ அதே மதுரையில் இருந்து போராட்டத்தை முன்னெடுப்போம்” என எச்சரித்தார்.

 





 



Calculate Your Body Mass Index ( BMI )


Calculate The Age Through Age Calculator