கேரளாவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாலும் இன்று  வியாபாரிகள் யாரும் காய்கறி கொண்டு வரப்படாததாலும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது . இதனால் சுமார் 3 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


India Corona Spike: இந்தியாவில் ஒரே நாளில் 11,692 பேருக்கு கொரோனா பாதிப்பு.. குறைந்ததா தொற்று.. நிலவரம் என்ன? முழு விவரம் இதோ..


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய மார்க்கெட்டாக உள்ளது. இங்கு சுற்றுப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகளால் அதிக அளவு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 80% சதவீத காய்கறி தேவைகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டே பூர்த்தி செய்து வருகிறது.


Leo Audio Launch: லியோ இசை வெளியீட்டு விழா சென்னையில் இல்லை: சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் விஜய்: எந்த ஊர் தெரியுமா?




கேரளாவில் நாளை  ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று வியாபாரிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இன்று ஒருநாள் மட்டுமே ரூ.5 கோடிமுதல் 6 கோடி வரை  வர்த்தகம் நடைபெறும் மார்க்கெட்டில் அது முற்றிலும் பாதிப்படைந்து இன்று ஒருநாள் மட்டுமே ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்படைந்து உள்ளது. இதனால் மார்கெட்டில் பணிபுரிந்து வரும் சுமைதூக்கும் தொழிளார்கள் மற்றும் வியாபாரிகள் பாதிப்படைந்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆடு மற்றும் கோழிச்சந்தை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே பிரசித்தி பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது.இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.


TN Weather Update: சென்னைக்கு ஊ... ஊ...: சுட்டெரிக்கும் சன்பாத்துக்கு ரெடியா? இல்லைன்னா உள்ளே ஓடுங்க! வானிலை நிலவரம்!




இதை முன்னிட்டு நேற்று அய்யலூர் சந்தைக்கு அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வந்து குவிந்தனர். நேற்று 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400 முதல் ரூ.450 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆனது. இளைஞர்கள் சேவல்களை மோத விட்டுப்பார்த்து வாங்கி சென்றனர். ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சந்தையில் ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடந்தது. நேற்று சுமார் ரூ.1½ கோடிக்கு விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண