இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ., ) யங் இந்தியன்ஸ் மதுரை (ஒய்.ஐ) மத்திய ஆளுமைகள் உடனான ஒய் -20 மாநாட்டின் இளைஞர்கள் குழு) கலந்துரையாடல் கருத்தரங்கம் மதுரை தியாகராஜர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் யங் இந்தியன்ஸ் மதுரை அமைப்பின் தலைவர் சர்மிளா தேவி வரவேற்புரை ஆற்றினார். இந்த ஒய்-20 மாநாட்டை வேளாண் உழவு தொழில் வர்த்தக சங்க நிர்வாகி ரத்தினவேல் அவர்கள் தொடக்கி வைத்து பேசினார். இந்த கருத்தரங்கு மூன்று அமர்வுகளாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகம் மற்றும் ஆட்சியில் இளைஞர்களின் பங்கு
வருமான வரி துறை ஆணையர் நந்தகுமார் IRS சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசிய போது ”முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் போன்றவர்கள் போல் எந்த துறையில் இளைஞர்கள் இருந்தாலும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தால் நிச்சியம் வெற்றி அடைய முடியும்” என்று விளக்கினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஸ்சேகர் அவர்கள் பேசுகையில் ”இளைஞர்கள் சரியான எதிர்காலத்தை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியாளர்களாக திகழ வேண்டும். அரசின் கொள்கைகள் குறித்து புரிதல் மற்றும் நாட்டின் நவளிற்காக பங்காற்ற வேண்டும்” என்றார்.
ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையர் வெங்கடேஸ்வரன் “இளைஞர்கள் நாட்டின் பிரச்சனைகளை கூர்ந்து நோக்கி அதற்கான முன்னெடுப்புகளை தலைமைத்துவத்துடன் எடுக்க முன் வர வேண்டும்” என்றார்.
இளைஞர்களை தொழில் புரட்சி 4.09 நோக்கி இளைஞர்களை மேம்படுத்துவதற்கு தொழில் துறை மற்றும் கல்வி துறையின் பங்கு.
சுப்புராமன் பாலசுப்ரமணியன் துணை தலைவர் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பேசுகையில், “ஒவ்வொரு துறையில் இருக்கும் மாணவர்களும் தங்கள் துறை வழியாக பிரச்னைகளை உணர்ந்து மற்ற இணைந்து தொழில்நுட்பத்தின் உதவியுடன் புத்தாக்கங்களை உருவாக்க வேண்டும்” என்றுரைத்தார்.
மேலும், ஜியோ வீயோ ஹெல்த் கேர் நிறுவனத்தின் தலைவரான செந்தில்குமார் பேசுகையில், ”இளைஞர்கள் அத்துனை துறையினரிடதும் இணைந்து தொழில் துறையினரை வழிகாட்டியாக கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினால் தொழில் புரட்சி 4.0 ஐ நோக்கி பயணப்பட முடியும்” என்று கூறினார்.
மேலும், ஐ.சி.டி அகடமியின் இணைத்துணை தலைவரான திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மத்திய அரசின் கல்வி துறை மற்றும் தொழில் துறையின் வளர்ச்சிக்காக அரசாங்க திட்டங்களும் அதற்கான பயிற்சி வகுப்புகளும் நிறைந்துள்ளன. அவற்றை இளைஞர்கள் பயன்படுத்தி தொழில்துறையில் எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம் என்றார். ஐசிடி அகடமியின் தொழில்பயிற்சிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
பெண்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் SOGIESC (பாலிர்ப்பு பாலினம், பாலின அடையாளம், பாலின் வெளிப்பாடு, பால்பண்பு மற்றும் பாலியல்பு) உள்ள சமூகத்தினரின் கண்ணியமான நிலையை இந்தியாவில் உறுதிப்படுத்துதல்.
தேசியசபை மாற்று பாலியினருக்கான தெற்கு பிராந்திய பிரதிநிதியான கோபிசங்கர் பேசுகையில், "பன்முக பால்பண்பு உடையவர்களுக்க அரசு கொள்கைகளை இந்தியாவில் மாற்றப் படுத்தப்பட்டு இருப்பதால் பன் பால்பண்புடன் பிறக்கும் சிசுக்களின் அறுவை சிகிச்சை கொள்கை மாற்றப்பட்டு குழதைகளுக்கான உரிமம் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது" என்றார்.
ஆசிய விளையாட்டு பதக்கத்தை வென்ற முதல் தமிழ் பெண்மணி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகள் பயிற்சியாளருமான தசாந்தி சௌந்தர்ராஜன் "தனது வாழ்க்கையை செங்கல் சூளையில் கூலி பெண்ணாக வளர்ந்து சர்வதேச தடகள வீராங்கனையாக உருவாக தான் சந்தித்த சவால்கள் மற்றும் வலிகளை பகிர்த்து கொண்டார். மேலும் தமிழ் தடகள வீராங்கனையின் முதல் சுயசரிதை நூலான "ஓடு சாந்தி ஓடு என்ற தனது புத்தகத்தை ஒய்-20 மாநாட்டில் வெளியிட்டார்.
தேசியசக்ஸம் சேவா அமைப்பின் தேசிய துணைத்தலைவர் மற்றும் மாற்று திறனாளிகளின் குழைந்தைகள் உரிமையின் சிறப்புணருமான காமாச்சி ஸ்வாமினாதன் பேசுகையில், "மாற்று திறனாளிகள் மற்றும் அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களையும் அவர்களின் வலிகளையும் நாம் உணர்ந்துகொண்டு அவர்களை கருணையுடனும் கண்ணியமாகவும் சமமாகவும் நடத்த வேண்டும். மற்றும் அவர்களுக்கு தேவையானது மனப்பூர்வமான அன்புமற்றுமே"என்றார். இவர்களின் நலனை மேம்படுத்த இளைஞர்கள் பல புதிய முன்னெடுப்புகளுடன் பங்காற்ற வேண்டும் என்று” கூறினார்.
யங் இந்தியன்சின் ஓய்-20 கலந்துரையாடல் மூன்று அமர்வுகளுடன் சிறப்பாக 750 மாணவ பங்கேற்பாளர்களுடன் சிறப்பாக நிறைவுற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் யங் இந்தியன் அமைப்பின் துணை தலைவரான திரு பைசல் அஹமத் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்