ஊழல், நிர்வாக சீர்கேட்டை தடுக்க மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக மத்திய அரசே செயல்படுத்த வேண்டும் என்று பழனியில் அர்ஜூன்சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரான பழனியை சேர்ந்த சரவணன் கடந்த சில நாட்களுக்க முன்பு மரணம் அடைந்தார். அதையடுத்து கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று பழனிக்கு வந்தார். பின்னர் சரவணனின் வீட்டுக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி பழனி கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம், பக்தர்களுக்கான வசதிகள் ஆகியவை மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. அதேவேளையில் கிரிவல பாதையில் இருந்த சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். பழனியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாட்டை வரவேற்கிறோம். ஆனால் பழனி முருக கடவுள் குறித்து ஆன்மிக பேச்சாளர் சுகிசிவம் பேசிய பேச்சு கண்டனத்துக்கு உரியது. அவரது பேச்சின் மூலம் திராவிட கருத்துகளை திணிக்க முயற்சிக்கிறார்கள்.
நிதிஆயோக் கூட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது மூலம் தமிழக நலனை புறக்கணித்து இருக்கிறார். இதுமட்டுமல்ல பல கூட்டத்தை இதுபோல் புறக்கணித்து இருக்கிறார்கள். இது அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. கொள்கைக்க எதிராக உள்ளது. இவர் திராவிட மாடல் என்ற பிரிவினை வாதத்தை கையில் எடுக்கிறார். மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் ஆனது. தமிழகத்தில் ஊழல், நிர்வாக சீர்கேடு உள்ளது. எனவே மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும்.
12th Original Marksheet: ஆக.1 முதல் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்; பெறுவது இப்படித்தான்!
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. எனவே மத்திய உள்துறை அமைச்சகம், கவர்னர் இதுபற்றி, மாநிலத்திடம் அறிக்கை கேட்க வேண்டும். பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடப்பதை போல் திருவண்ணாமலையில் சிவபக்தர்கள் மாநாடு நடத்த வேண்டும். பழனியில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கிரிவல பாதையில் இருந்தே தொடங்க வேண்டும். அதற்கு அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்துள்ளார்.