திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரசூல் மைதீன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மேலப்பாளையம் பகுதியில் தனியார் வணிக வளாகத்திற்கு எதிர்புறத்தில் அன்சாரி என்பவர் ருசி எனும் பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு அதிகாரிகளிடம் முறையான அனுமதி எதுவும் பெறாமல் கொலம்பஸ், சறுக்கு விளையாட்டு, ஜெயண்ட் வீல், நீச்சல்குளம் போன்றவற்றை நடத்தி வருகிறார். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு, முதலுதவி வசதி போன்றவை எதுவுமின்றி பொழுதுபோக்கு பூங்க நடத்தப்பட்டு வருகிறது. பல பொழுதுபோக்கு பூங்காக்களில் விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படும் நிலையில் இதுபோல முறையான அனுமதியின்றி பொழுதுபோக்கு பூங்காவை நடத்துவது ஏற்கத்தக்கதல்ல.

Continues below advertisement

இந்த சூழலில் எவ்விதமான அனுமதியும் இன்றி நெல்லையில் ருசி ஹோட்டலில் பொழுதுபோக்கு பூங்கா நடத்துவது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ருசி ஹோட்டல் சார்பில் நடத்தப்படும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா,  ஸ்ரீமதி அமர்வு மக்கள் மகிழ்ச்சிக்காக என செல்லும், பொழுதுபோக்கு பூங்காக்கள் பாதுகாப்பானவையாக இருப்பது அவசியம் என குறிப்பிட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் சுற்றுலாத்துறை செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கிறது.

Continues below advertisement

தமிழகத்தில் பொழுதுபோக்கு பூங்காக்களை அமைப்பது மற்றும் முறைப்படுத்துவது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளதா? இல்லை எனில் ஏன் உருவாக்கக் கூடாது? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர். தொடர்ந்து, மக்கள் மகிழ்ச்சியை தேடி இது போன்ற பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்கின்றனர். அவை முறையாக பராமரிக்கப்பட்டால் தான் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என கருத்து தெரிவித்தனர்.