வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் நல்ல மழைப் பொழிவு இருந்து வருகிறது. அதே போல் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணையில் 70 அடிக்கு மேல் முழு கொள்ளாவை எட்டியதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
மதுரை பகுதியில் 10 ஆயிரம் கன அடி நீரானது ஆர்ப்பரித்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தரைப் பாலம் முழுவதும் தண்ணீர் நிறைந்து செல்கிறது. இந்த சூழலில் இதில் இருந்து வெளியேறும் தண்ணீரானது சாலைகளை ஆக்கிரமித்தவாறு செல்கிறது. இந்த சூழலில் அங்கு பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளர் கல்யாண சுந்தரம் மற்றும் காவலர் ராமன் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாத இடங்களில் குப்பையை அகற்றி தண்ணீர் வடிய வைக்கும் பணியில் காவலர் ராமன் ஈடுபட்டது அனைவரையும் பாரட்ட வைத்தது. மாநகராட்சி ஊழியர் செய்ய வேண்டிய வேலையை காவலர் தன்னந்தனியாக பணி செய்யும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர் மூலம் மொத்தம் 135 மெகாவாட் மின்உற்பத்தி
மேலும் செய்திகள் படிக்க - Rain : மதுரையில் வெளுக்கத் தொடங்கிய வடகிழக்கு பருவமழை..! பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்தது..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்