அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையை கண்டித்து அதிமுக தொண்டர்கள் இரு முன்னாள் அமைச்சர்களின் இல்லத்தின் முன்பாக திரண்டனர்.






அத்துடன் கோவையில் எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்கு முன்பாக 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருந்தனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் திரும்பி செல்ல வலியுறுத்தினர். எனினும் அவர்கள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதன்காரணமாக காவல்துறையினர் அமல் கந்தசாமி, அம்மன் அர்ச்சுனன், செ.தமோதரன்,  கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ் ஆகிய‌ 6 எம்.எல்.ஏக்களை கைது செய்துள்ளனர். 




 





இந்நிலையில் மதுரை கோ.புதூர் ஜவஹர்புரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள தேனி அரசு மருத்துவகல்லூரியின் முதல்வரான மருத்துவர் பாலாஜிநாதன் என்பவரது வீட்டில் 5க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். மருத்துவர் பாலாஜிநாதன் கடந்த 2020ஆம் ஆண்டு சேலம் அரசு மருத்துவகல்லூரியின் முதல்வராக இருந்தது குறிப்பிடதக்கது  முதற்கட்டமாக நடந்துவரும் சோதனையில் பாலாஜிநாதன் சேலத்தில் பணியில் இருந்தபோது அனுமதி அளித்த ஆவணங்களை கைப்பற்றி அது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். 



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர