இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை கலெக்டர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு - அண்ணாமலை

நான் தவறு செய்யவில்லை என பத்திரிகையாளரை சந்தித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்தது முட்டாள்தனமாக பேசியது அதைவிட தவறு - அண்ணாமலை காட்டம்.

Continues below advertisement
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை மாவட்ட ஆட்சியர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
 
ஜல்லிக்கட்டில் நடந்தது தவறு 
 
மதுரையில் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..,” சமீபத்தில் திராவிட கட்சியின் தலைவர் விஜயை அழைத்தார்.  எந்த கட்சியெல்லாம் தமிழகத்தில் காணாமல் போகிறதோ அதை எல்லாம் விஜயை அழைக்கிறார்கள்.  செல்வப்பெருந்தகை அவர்களுக்கு நான் சொல்வது, நடிகர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை 10% ராகுல் காந்தி மீது வைக்க வேண்டும். இதை நான் அறிவுரையாக சொல்கிறேன். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் பெருமை. அடுத்த ஆண்டு பாஜகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள். ஜல்லிக்கட்டு போட்டிக்கு துணை முதலமைச்சர் வருவது தவறு கிடையாது. அவரது பையனையும் கூட்டிட்டு வந்தது தவறு கிடையாது. மகனுக்கு முதல் இருக்கையில் அமர வைத்தார்களா அது தவறுதான்.  அதைவிட மாபெரும் தவறு துணை முதல்வர் மகன் இன்பநதியின் நண்பர்களை முதல் இருக்கைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அமைச்சர் மூர்த்தி செய்தது தவறு. 
 
ஆட்சியர் நடந்து கொண்ட விதம் ஏற்புடையது அல்ல
 
மாவட்ட ஆட்சியர் என்னை வற்புறுத்தவில்லை என்று கூறுகிறார். அப்புறம் எதற்கு ஒரு இருக்கையை மாவட்ட ஆட்சியர் விட்டுக் கொடுத்தார். கலெக்டர் அமர்ந்திருந்த இருக்கையில் இன்பநதியின் நண்பர் அமர்ந்திருக்கிறார்.  மாவட்ட ஆட்சியர் தண்ணி இல்லாத காட்டிற்கு மாற்றி விடுவார்கள் என நினைக்கிறார். அவ்வளவு எளிதாக மாவட்ட ஆட்சியர் இருப்பிடத்திற்கு வர முடியாது.  பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் விழுந்து விழுந்த படித்து அந்த இடத்திற்கு வருகிறார்கள். நியாயமாக பார்த்தால் கலெக்டர் அமைச்சருக்கும் துணை முதல்வருக்கும் நடுவில் அமர்ந்திருக்க வேண்டும். அந்த இருக்கையை விட்டுக் கொடுத்ததை மாபெரும் தவறு. மாவட்ட ஆட்சியரை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டார்கள். இப்படி இருந்தால் சாமானிய மனிதருக்கு இந்த கலெக்டரின் மீது எப்படி நம்பிக்கை வரும். அமைச்சர் மூர்த்தி பவர் இருந்தால் ஆடுவார், பவர் இல்லை என்றால் சாதாரணமாக அமர்ந்து விடுவார்கள். ஏனென்றால் அவர் அரசியல்வாதி, மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்ட விதம் ஏற்புடையது அல்ல. 
 
ஸ்டார் வேல்யூ
 
பரந்தூர் செல்லும் விஜய்க்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்படுகிறதே? இதற்கே இப்படி என்றால் முதலமைச்சரானால் மக்களை எப்படி சந்திப்பார். காமராஜர் நடந்து சென்று மக்களை சந்தித்தார். இன்று அரசியல்வாதி செல்வதற்கு முன்பின் போலீஸ். நீங்கள் யாரை சென்று சந்திக்க போகிறீர்கள். மக்கள் குறையை எப்படி மனதில் வைக்க போகிறார்கள். நாளை எம்.எல்.ஏ. ஆனால்  மக்கள்  எப்படி உங்களை சந்திக்க முடியும்..
அரசு என்பது வலியவர்களுக்கா எளியவர்களுக்கா ஸ்டார் வேல்யூ உள்ளவர்களுக்காக அன் புருவனா (Unprove))அரசியலு வந்தவர்களுக்கா இன்னொரு தொழிலில் சாதனை பண்ணி இருக்கிறார். அரசியலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம். கட்டுப்பாடு  இல்லாமல் காவல்துறை அனுமதி கொடுத்தால் ஏதேனும் சம்பவம் நடந்தால் காவல்துறையை சொல்லுவார்கள். காவல்துறை  கெடுபிடி என்றால் நாளைக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டுமே. நாளைக்கு எப்படி போய் வீட்டில் பார்க்க முடியும். ஸ்டார் வேல்யூடன் வரும்போது ஒரு பிரச்சனையாக பார்க்கிறேன்” என்றார்.
 
Continues below advertisement