தேவேந்திரன் என்ற பெயரை கேட்கும் போது நரேந்திரன் என கேட்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நினைவு கூர்ந்தார். பரமக்குடியில் இன்று காலை பலத்த  கட்டுப்பாடுகளுடன் தொடங்கிய  இமானுவேல் சேகரன் 64-ஆம் ஆண்டு நினைவு நாளில் பொது மக்கள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக  பாஜக சார்பில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.


பின்பு செய்தியாளரிடம் பேசிய பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை, இமானுவேல் சேகரனின் 64-ஆம் ஆண்டு நினைவு நாளன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி தேவேந்திரன் என்ற பெயரைக் கேட்கும்போது நரேந்திரன் என்று கேட்கிறது என பெருமையுடன் தெரிவித்தார். மேலும், நீண்ட நாட்கள் கோரிக்கையான தேவேந்திரகுல 7 உட்பிரிவு ஏற்படுத்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இது  பெருமைக்குறியது என்றும் கூறினார்.


”வடிவேலு பிரச்சனையை தீர்த்தது முதல்வர் அல்ல.. நான்தான்” - சீமான்


Thirumavalavan | புதிய ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்