ஊரை விட்டு தள்ளி இருக்கிறது அந்த ஹோட்டல். கூரைகள் வேயப்பட்ட அந்த கடைக்கு வெளியில் விறகுக் கட்டைகள் சிதறிக் கிடந்தது. வியற்க விறுவிறுக்க மாஸ்டர் பரோட்டா போட்டுக் கொண்டிருந்தார் மாஸ்டர்.
கால் பந்து வீரர்கள் போல சப்ளையர்கள் உருண்டு, உருண்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். கண்களில் புகைச்சல் ஏற்படுத்தும் கண்ணீர் ஒரு பக்கம் பறந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த அவஸ்தைகள் எதுவுமே தெரியாத அளவிற்கு ஆனந்தமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் வாடிக்கையாளர்கள்.
மணமணக்கும் உணவு கிடைக்கும் மதுரையில் தான் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது. மதுரை நகர் பகுதியில் மட்டுமில்லை மதுரை சுற்றியுள்ள திருமங்கலம், அலங்காநல்லூர், உசிலம்பட்டி என எல்லா இடங்களிலும் சுவையான உணவுகள் கிடைக்கத்தான் செய்கிறன. அப்படியான சுவை ஹோட்டல் தான் மேலூர் கூரைக்கடை. மேலூரில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த ஹோட்டல். மக்களால் செல்லமாக கூரைக்கடை என அழைக்கப்படும் இந்த கூரைக்கடை ஹோட்டல் பிரபலமானது. இந்த ஹோட்டல் பற்றிய வர்ணனையை கேட்ட பின்பு மேலூருக்கு "இன்னைக்கு ஒரு புடி" என்ற யூடியூப் தாத்தா வசனத்தை சொல்லிக் கொண்டு கடைக்குச் சென்றோம்.
ஹோட்டல் உரிமையார் மைதீன் அத்தா வாஞ்சையோடு வாங்க தம்பி உள்ள உட்காருங்க இடம் இருக்கு என்றார். பெயருக்கு தகுந்ததுபோல் கூரை செட்டும் அங்கே இருந்தது. பிரியாணியை தூக்கி சாப்பிடும் அளவிற்கு முட்ட குஸ்கா கொடுத்தார்கள். முட்ட குஸ்காவிற்கு அவர்கள் கொடுத்த சால்னா சுவை Awesome.. அழகர்கோயில் சம்பா தோசை கணக்காக அவங்க கொடுத்த முட்ட லாப்பா வேற ரகம். லேயர் போட்டு செய்யாமல் ஒன்னா போட்டு செஞ்சுருந்தாங்க.
இப்படியான சுத்தமான நான் வெஜ் கடையில் தயிர் சாதம் கிடைக்கும் என்றால் நம்ப முடியவில்லை. ஆனால் அங்கு தொட்டுக்க தக்காளி தொக்குடன் தயிர் சாதமும் கொடுத்தாங்க. நான்வெஜ் விரும்பிகள் கூட கேட்டு, கேட்டு வாங்கி சாப்பிட்டனர். அந்த அளவிற்கு தயிர் சாதமே அவ்வளவு சுவையாக இருந்தது. சிலர் தயிர் சாதத்திற்கு பெப்பர் சிக்கனை சைடிஷ்ஷாக வைத்துக் கொள்கின்றனர். லேசான பரோட்டா, வெங்காயம் போட்டு பிச்சுப்போட்ட சிக்கன் எல்லாம் ஏக சுவையா இருந்தது. இப்படி கூரைக்கடை ஹோட்டலின் சுவையை அடிக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு சுவை மிகுந்த ஹோட்டல். நியாயமான விலையில் நல்ல சுவையான உணவை பெற கண்டிப்பா கூரைக்கடையை டிரை பண்ணலாம்.
கடைக்கு வந்திருந்த வழக்கறிஞர் ஒருவர், “எங்களுக்கு சொந்த ஊர் கம்பம். ஒரு நாள் ராமநாதபுரம் செல்ல வேண்டியிருந்தது. மதுரை வழியா வந்த..,நாங்க நல்ல ஹோட்டல கேட்டோம். எங்க கூட வந்த நண்பர் ஒருவர் மேலூர் கூரைக்கடைய சஜெஸ்ட் பண்ணாறு. சட்டுனு கிளம்பி மேலூர் வந்துட்டோம். நாங்க ஏறுக்கு மாறா பாதைய பிடிச்சாலும், அதை சமரசம் செய்துகொள்ளும் அளவில் தான் மேலூர் கூரைக்கடை உணவு டேஸ்ட் இருந்தது. மறக்க முடியாத அனுபவம். பெரிய ஹோட்டலில் கிடைக்காத சுவை இங்க இருந்தது. அதில் இருந்து எப்ப யோசிச்சாலும் மேலூருக்கு வந்துருவோம். இவங்க கடையில் விலை மலிவு கூடுதல் பிளஸ். கூரைக்கடை என்பதால் இவங்களுக்கு மெயிண்டையின் செலவும் பெருசா இல்ல. அதனால ஹோட்டலில் உணவு விலையும் கம்மிதான். 200 ரூபா இருந்தாபோதும் பிடிச்ச ஐட்டத்த பூரா ஆடர் பண்ணி சாப்ட்டுரலாம்” என்கிறார் மனநிறைவாக.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!