தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு ஏற்ப மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேனி மாவட்டத்தில் தேர்தலை நடத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
நகராட்சியில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை விபரங்கள்
6 நகராட்சிகளில் 1,63,542 ஆண் வாக்காளர்கள், 1,72,993 பெண் வாக்காளர்கள், 98 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3,36,633 வாக்காளர்கள் உள்ளனர். 22 பேரூராட்சிகளில் மொத்தம் 1,36,127 ஆண் வாக்காளர்கள், 1,42,183 பெண் வாக்காளர்கள், 31 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,78,341 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள நகராட்சி வாரியாக தேனி அல்லிநகரத்தில் 42,031 ஆண்கள், 43,646 பெண்கள், 77 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 85,754 வாக்காளர்களும், போடியில் 33,820 ஆண்கள், 35,511 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 69,337 வாக்காளர்களும், சின்னமனூரில் 18,986 ஆண்கள், 20,041 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 39,030 வாக்காளர்களும் உள்ளனர். கம்பம் நகராட்சியில் 31,106 ஆண்கள், 33,121 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 64,232 வாக்காளர்களும், கூடலூர் நகராட்சியில் 18,267 ஆண்கள், 19,450 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 37,720 வாக்காளர்களும், பெரியகுளம் நகராட்சியில் 19,332 ஆண்கள், 21,224 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 40,560 வாக்காளர்களும் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளிலும் இந்த முறை பெண்கள் நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேருராட்சியில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை விபரங்கள்