விஜயுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா..? - நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேட்டி

திமுகவும், ஊழலும் கூட பிறந்தது. திமுக என்றாலே ஊழல் என்று அர்த்தம். இரண்டையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது.

Continues below advertisement

தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக  கூட்டணி அமைப்பதில்  குழப்பம், கூட்டணி அமையலாம், அமையாமலும் போகலாம். கூட்டணி தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேட்டியளித்தார்.

Continues below advertisement

திண்டுக்கல், நத்தம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி குறித்த கேள்விக்கு தமிழக வெற்றி கழகம் இதுவரை களத்தில் இறங்கி வரவில்லை. கருத்து கூற ஒன்றுமில்லை. அவருடைய செல்வாக்கை நிரூபிக்கவில்லை. செல்வாக்கை நிரூபிக்காமல் எதுவும் சொல்ல முடியாது. அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு செய்திகள் இல்லை. தேர்தலை சந்தித்து இருந்தால் கருத்து கூறியிருக்கலாம். அவர் வெற்றி பெறலாம், வெற்றி பெறாமல் இருக்கலாம். அவரைப் பற்றிய கருத்து சொல்வதற்கு அபிப்பிராயம் இல்லை. தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமையலாம், அமையாமல் போகலாம். கூட்டணி அமைவது தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்ய முடியும். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  குறித்த கேள்விக்கு உச்சநீதிமன்றம் குறித்து கருத்துக்கு பதில் சொல்ல முடியாது என தெரிவித்தார்.


கெஜ்ரிவாலும் எங்களது கூட்டணியில் இல்லை, இந்தியா கூட்டணியிலும் இல்லை. ஊழல் இல்லாத ஆட்சியை மக்கள் எதிர்பார்த்து மக்கள் கெஜ்ரிவாலை தேர்ந்தெடுத்தனர். ஆனால், கெஜ்ரிவால் ஊழல் செய்ததால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர். ஊழலுக்கு எதிரான தீர்ப்பு தான் இது. அப்படிப் பார்த்தால் திமுகவிற்கும் அந்த அச்சம் இருக்கிறது. திமுக என்றாலே ஊழல் என்றுதான் அர்த்தம்.  தமிழ்நாடு அரசு மாதிரி ஊழல் இருக்கின்ற அரசு எந்த மாநிலத்திலும் இல்லை. அந்த அளவிற்கு மோசமான ஆட்சிகெஜ்ரிவால் மக்களுக்கு இலவச திட்டங்கள் செயல்படுத்துவதில் நிறைய செலவழித்தார். திமுக மக்களுக்கு ரூ.1000 கொடுக்கிறோம் என்ற மம்மதையில் இருக்கின்றனர். மகளிருக்கு இலவச பஸ் மக்களுக்கு ரூ.1000 நம்பி உள்ளனர். கெஜ்ரிவால் கொடுக்காத நலத்திட்டமா அவரையே தோற்கடித்து விட்டனர்.

அனைத்தும் இலவசம் என கெஜ்ரிவால் செயல்படுத்தினார். திமுகவும், ஊழலும் கூட பிறந்தது. திமுக என்றாலே ஊழல் என்று அர்த்தம். இரண்டையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது.இங்கே தற்போது தேர்தல் வந்தால் ஊழலுக்கு எதிராக வந்தாலும், திமுகவுக்கு எதிராக ஆட்சி அமையும், சரியான நிர்வாகம் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்பதும் மாநில அரசின் கடமைகளை செய்யாத ஒரு அரசு மக்களுக்கு பாதுகாப்புக்கு கொடுக்க முடியாத அரசு, ஊழல் நிறைந்த அரசு இந்த திமுக அரசிற்கும் எதிராக தான் மக்கள் வாக்களிப்பார்கள்.


கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட கதிதான் நாளைக்கு திமுகவும் ஏற்படும்.ஈரோடு தேர்தல் வெற்றி குறித்த கேள்விக்கு திமுகவால் தமிழ்நாடு முழுவதும் பட்டி போட்டு அடைக்க முடியாது. மக்களை ஆடு, மாடு போல் அடைத்து வைத்து பணம் கொடுத்துள்ளனர். இது தேர்தலை கிடையாது. எந்த தேர்தலுடன் இதை ஒப்பிட்டு பார்க்க முடியாது. டெல்லியில் கிடைத்த வெற்றி போல் தமிழகத்திலும் வெற்றி கிடைக்கும் என தமிழிசை கூறுவது குறித்த கேள்விக்குஇது கனவு டெல்லியில் கிடைத்த வெற்றி இந்தியா முழுவதும் கிடைத்துவிடும் என கூற முடியாது.ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரத்தியோகத் தன்மை உள்ளதுடெல்லி மக்களின் மனநிலை வேறு. தமிழ்நாட்டில் திமுக அதிமுக ஆட்சியை ஒப்பிட்டு பார்க்கலாம். அப்படி ஒப்பிட்டு பார்த்தால் எடப்பாடி ஆயிரம் மடங்கு மேலானவர் என கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola