மதுரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அ.தி.மு.க., வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்று முடிந்தது. நேற்று காலை முதல் வரும் தொண்டர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், முதலுதவி மருத்துவ மையங்கள், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன, அதேபோல் 12 இடங்களில் வாகன நிற்கும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டன.



காலை 8:30 மணிக்கு தங்கும் விடுதியிலிருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு சாலை இருபுறமும்  அ.தி.மு.க., தொண்டர்கள் சாரை, சாரையாக நின்று வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காண்பித்தபடியே சென்றார். அப்போது தொண்டர்கள் வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் வாழ்க, கழகத்தின் காவலர் எடப்பாடியார் வாழ்க, அம்மாவின் வாரிசு எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து மாநாடு திடலில் வரும்பொழுது தாரை தப்பட்டை முழங்க, சென்டுமேளம் முழங்க, பேண்டு வாத்தியம் முழங்க அதிமுக மகளரனி சார்பில் பெண்கள் பூரண கும்பம்  மரியாதையுடன் கழகப் பொதுச் செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.




அதனை தொடர்ந்து மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 51 அடியுள்ள கொடிக்கம்பத்தில் கொடியினை எடப்பாடி பழனிசாமி ஏற்றும்போது , ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி மரியாதையை செலுத்தப்பட்டது . அப்போது அதிமுக அம்மா பேரவையின் சார்பில் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் 3000 கழக அம்மா பேரவைத் தொண்டர் படை சல்யூட் அடித்து மரியாதை செய்தது.  அதனைத் தொடர்ந்து அங்கு வெண்புறாக்களை பறக்க விட்டார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, கோவை, சென்னை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் கொண்டு வந்த தொடர் ஒட்டஜோதியை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயளாலர் ராஜன் செல்லப்பா ஆகியோர் நினைவு பரிசை வழங்கினர்.




அதனை தொடர்ந்து மாநாட்டு திடலில் ஜெயலலிதா அரசின் சாதனங்களை விளக்கி வைக்கப்பட்டுள்ள கண்காட்சி கூடங்களை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் அதிக அளவில் குவிந்து இருந்ததால், வேன் மூலம் நின்றுபடியே இரட்டை விலை காண்பித்தபடி சென்றார். அதனை தொடர்ந்து கழகத்திற்காக உழைத்த மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழியை வழங்கி கெளரவித்தார். இதனைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேவா இன்னிசை கச்சேரி ,புதுக்கோட்டை செந்தில்குமார் நாட்டுப்புற கச்சேரி, கழக இலக்கிய அணி செயலாளர் செல்வன் தலைமையில், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், கழக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், நடிகை விந்தியா உள்ளிட்ட பலர் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.




தொடர்ந்து மாநாட்டில் எடப்பாடி கே.பழனிசாமி மாநாடு உரை ஆற்றினார். இந்நிலையில் அதிமுக மாநாட்டில் வழங்கப்பட்ட உணவு மிக மோசமாக இருந்ததால் தொண்டர்கள் உணவுகளை கீழே வீசினர். இந்நிலையில் டன் கணக்கில் குவிந்த உணவுகள் வீணாக கிடக்கும் வீடியோ பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.