பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 59ஆவது ருபூஜை 104 ஆவது ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே  பசும்பொன்னில் இன்று தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன் தேவர் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.




அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த நேரடியாக செல்லாத நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ, காமராஜ், பாஸ்கர், விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.




ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஏன் விழாவை புறக்கணித்தனர் என்று திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் விழாவை புறக்கணிக்கவில்லை. ஓபிஎஸ் மனைவியின் திதி நிகழ்வில் இருக்கிறார், இபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலை தான் வீடு திரும்பி உள்ளார். மேலும் இன்று சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.




இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அதிமுக சார்பில் தேனி மாவட்ட செயலாளர்கள் உட்பட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் என கட்சி நிர்வாகிகள் கோஷமிட்டனர். கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்த இந்த சூழ்நிலையில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் என கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமானது 138 புள்ளி 70 அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு தற்போது 534 கன அடி நீரை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு 2 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண