கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் மூலம் தமிழகத்திற்கு தேனி, திண்டுக்கல் ,மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், தேனி மாவட்டத்தில் குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பழனிசெட்டிபட்டி வரையில் வருடந்தோறும் செய்யப்படும் 2 போக விவசாயத்தின் நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை.
இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க தமிழகத்திற்கு உரிமை உள்ளது என 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ள நிலையில், தற்போது கேரள மாநிலத்தில் தொடர் கனமழ காரனமாக தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் தேக்கடி பெரியார் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது நிலையில் அணையின் நீர் மட்டமானது 138 புள்ளி 70 அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு தற்போது 534 கன அடி நீரை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு 2 மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க தமிழகத்திற்கு உரிமை உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக அணை குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் அணையில் இருந்து தற்போது தண்ணீரை திறப்பதற்கு தேனி மாவட்ட மக்களிடையே எதிர்ப்பு இருந்த நிலையில் இன்று கேரளா பொதுப்பணித்துறையினர் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர்கள் முன்னிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இரண்டு மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரு மாநில மக்களின் நலன் கருதி முடிவெடுக்கப்படுமென கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் உறுதி அளித்திருந்தார் . அணையில் 142 அடி நீர் தேக்கப்படும் என எதிர்பார்த்திருந்த தேனி மாவட்ட மக்களுக்கு தற்போது அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்