1. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக உப்பளப்பணி முற்றிலும் நிறுத்தம்; இதுவரை 17 லட்சம் டன் உப்புகள் தயாரிப்பு

 

2. தீபாவளி அன்று திரையரங்கம் திறக்க தடை கோரியும் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் திறக்க தடை கோரியும் தூத்துக்குடி மாவட்ட பாஜக பொது செயளாலர் திரு. ரா. சிவமுருகன் ஆதித்தன்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

 

3.தொல்லியல் ஆய்வு நடைபெறும் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வைப்பகம் பணிகள் மற்றும் ஆய்வுப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். 

 

4. மதுரை கிழக்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

 

5. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் சசிகலா மலரஞ்சலி செலுத்தினார்.

 



 

6. முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 138 அடியை எட்டியதால் அணையிலிருந்து வினாடிக்கு 534 கன அடி வீதம் 2 மதகு பகுதியிலிருந்து கேரளாவிற்குள் உபரி நீர் திறப்பு.

 

7. தூத்துக்குடி கீழூர் ரயில் நிலைய தண்டவாளம் கனமழை காரணமாக நீரில் மூழ்கியதால் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த முத்துநகர் ரயில் மேலூர் ரயில் நிலைத்தில் நிறுத்தம் 

 

8. சிவகங்கை மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மணிமுத்தாறு, உப்பாற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது.

 

9. சிவகங்கை அருகே பில்லூர் பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா, 2 அரிவாள்கள், 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் 


 

10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 15 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75188-ஆக உயர்ந்துள்ளது.