கீழடியில் அரசியல் சுற்றுப்பயணம் செய்தபோது செல்லூர் ராஜூ வை தனது காரில் ஏற வேண்டாம் என மறுத்த எடப்பாடி பழனிசாமி - வீடியோ காட்சிகள் தற்போது வைரல்.

தென் மாவட்டங்களில் ஈபிஎஸ் பயணம் மேற்கொண்டார்
 
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அரசியல் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டம் கீழடியில், அருங்காட்சியகத்தை பார்வையிட்டு பின்னர் கீழடி பகுதியில் அரசியல் பிரச்சாரம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக, மதுரையிலிருந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அதிமுக ஆதரவாளர்கள் பலரும் சென்று இருந்தனர்.
 
ஈபிஎஸ் உடன் காரில் வரமுயன்ற செல்லூர் ராஜூ
 
அப்போது எடப்பாடி பழனிசாமி- ஐ வரவேற்பதற்காக கீழடியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ காத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கார் வந்ததும் அவருக்கு சால்வைகள் அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். தொடர்ந்து செல்லூர் கே.ராஜூ உடன் இருந்த ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது திடீரென செல்லூர் ராஜூ எடப்பாடி பழனிசாமி பயணித்த காரின் பின்புறம் ஏற முயற்சி செய்தார்.
 
எடப்பாடி பழனிசாமி பேசிய வீடியோ காட்சிகள் வைரல்
 
அப்போது செல்லூர் ராஜூவை தனது காரில் ஏற வேண்டாம். உங்கள் காரிலேயே வாருங்கள் என செல்லூர் ராஜூவிடம் எடப்பாடி பழனிசாமி பேசிய வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ”அண்ணே வேண்டாம், வேண்டாம் எனது காரில் ஏற வேண்டாம். உங்களது காரிலேயே வாருங்கள்” - என்று இபிஎஸ் செல்லூர் ராஜூவிடம் கூறிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பேசு பொருளாகி வருகிறது.