பா.ஜ.க., தமிழக தலைவர் அண்ணாமலை கண்டித்து அ.தி.மு.க., வினர் பூவந்தி, மணலூர் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு


TN Lok Sabha Election Results 2024 ; மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து நொடிக்கு நொடி அரசியல் நகர்வுகள் மாறி வருகின்றன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக வெளியான தேர்தல் முடிவுகள் பல ஆச்சரியங்களை தந்துள்ளன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.


பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கருத்து


ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றி சாதனைப் படைத்தது. அதேசமயம் எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க, பா.ஜ.க,நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர். ஆனால் கடந்த தேர்தலை காட்டிலும் தங்களுடைய வாக்கு வங்கி சதவிகிதம் உயர்ந்திருப்பதாக தோல்விக்கு பின்னர் அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் ’எங்கள் உட்கட்சி விவகாரங்களில் தலையிடக் கூடாது’. என, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை கண்டித்து அ.தி.மு.க., வினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


- நடிகர் விஜய் குறித்த கேள்வி... அண்ணாமலையின் அதிரடி பதில் - 2026இல் யார் ஆட்சி? - முழு பேச்சு


சிவகங்கையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவுக்கு உட்பட்ட  பூவந்தி, மணலூர் ஆகிய பகுதிகளில் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனை அ.தி.மு.க., மாணவரணி பொருளாளர் மணிமாறன் கண்டன சுவரொட்டிகளாக ஒட்டியுள்ளார். அதில் ”அண்ணாமலையே எச்சரிக்கிறோம். அ.தி.மு.க உட்கட்சி விவகாரங்களில் தலையிட்டால் அண்ணாமலையே, உன் வாலை ஓட்ட நறுக்க வேண்டி வரும்.” எனவும் சுவரொட்டியில் வாசகங்கள் அடங்கியுள்ளது. பா.ஜ.க தமிழக தலைவருக்கு எதிராக அ.தி.மு.கவினர் ஒட்டியுள்ள சுவரொட்டியால்   பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - “எல்லாத்துக்கும் அண்ணாமலைதான் காரணம்” - உண்மையை உடைத்து பேசிய வேலுமணி தோல்வி குறித்து விளக்கம்