தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி, குற்றாலம் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என மொத்தம் 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இவ்வழக்கு  முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம்சந்திரமேஷிஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜெகதீஷ் லலித்குமார், ராஜேஷ் பட்டேல், நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல், விஷால், கீர்த்திபட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி முகேஷ் பட்டேல், சுப்பிரமணியன், தினேஷ் பட்டேல், பிரேம்சந்திரமேஷிஹா ஆகிய 4 நபர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.



 

மேலும், இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி ஜெகதீஷ் லலித்குமார், ராஜேஷ் பட்டேல், நவீன் பட்டேல், தர்மிஸ்தா பட்டேல், விஷால், கீர்த்திபட்டேல், சண்முகராஜ், மைத்திரிக் ஆகிய 8 நபர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், குருத்திகா பட்டேல் கடத்தப்படும் சி.சி.டி.வி., வீடியோ காட்சிகள் உள்ளது. அவரை கேரளா வழியாக 5 கார்களை அடுத்து அடுத்து மாற்றம் செய்து குஜராத்திற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளார்.  கிருத்திகா பட்டேல் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது



கிருத்திகா பட்டேல் சம்பந்தமான ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வில் நிலுவையில் உள்ளது. எனவே ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து வழக்கு விசாரணையை  20.2.2023 -க்கு ஒத்தி வைத்தார்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண