40 வயதை எட்டிய தீபா சர்வதேச மாற்றுத்திறனாளிகள் போட்டியில் பதக்கங்களை வென்று துணிவு மற்றும் சாகச செயலுக்காக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி கையால் கல்பனா சாவ்லா விருது பெற்றவர்.
தீபாவின் கணவர் மரிய ஜான்பால், ஹாக்கி போட்டிக்காக தனது வாழ்க்கையை அற்பணித்து கோப்பைகளை வென்றவர். தற்போது ஹாக்கி கோச்சாகவும், இண்டர்நேஷனல் ஹாக்கி நடுவராகவும் இருந்து வருகிறார். தீபா - மரியஜான் தம்பதிக்கு ஜோவினா மற்றும் ஜோனிசா என இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இருவரும் தற்போது ஹாக்கி போட்டியில் மாநில, தேசிய விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த குடும்பத்திற்கு தற்போது வரை அரசு சார்பாக முழுமையான அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது, என வேதனை தெரிவித்தனர். மதுரை எல்லீஸ் நகரில் உள்ள அவர்களது வீட்டிற்கும், தங்களது வீட்டின் அருகிலேயே உள்ள ஹாக்கி கிரவுண்டுக்கும் சென்று அவர்களுடன் கலந்துரையாடினோம்.
இதையடுத்து ஏ.பி.பி., நாடு செய்தி தளத்தில் கல்பனா சாவ்லா விருது பெற்றவருக்கு தலையாரி வேலை கூட கிடைக்கவில்லை ; வேதனையில் மாற்றுத்திறனாளி வீரங்கனை ! என்ற தலைப்பில் செய்திகளை வெளியிட்டோம். இந்நிலையில் மதுரை வந்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீராங்கனை தீபாவிற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் வேலை வழங்குவதாகவும் சில மாதங்களில் நிரந்தர பணியாளராக வேலையை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தீபாவிடம் பேசினோம், “திடீர் என போன் செய்து வரசொன்னார்கள். குடும்பத்துடன் ரேஸ்கோர்ஸ் விளையாட்டி அரங்கிற்கு சென்றோம். அங்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலை வழங்குவதாக உறுதி அளித்தார். இது மிகவும் மகிழ்ச்சிய உள்ளது” என நன்றி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்