மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ உருவப்படத்திற்கும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது.

 


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதனால் அமமுகவிற்கு பின்னடைவு ஏற்படுமா ?

 

ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலுக்கு அவர்களது விரும்பம். தேர்தலில் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

 

பி.ஜே.பி., கட்சி அமமுக மற்றும் சசிகலாவின் வளர்ச்சியை தடுத்தது. பி.ஜே.பி., கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு

 

பி.ஜே.பி.,யில் உள்ளவர்கள் என்னோடு பேசிவருகின்றனர். பி.ஜே.பி.,யில் நண்பர்கள் யார் என்பதை குறித்து தெரிவிக்க விரும்பவில்லை. இருந்த போதிலும் ஒரு கட்சி மற்றொரு கட்சியின் வளர்ச்சியை தடுப்பது இயற்கையான ஒன்று. அதையெல்லாம் தாண்டி ஒரு கட்சி வளர வேண்டியுள்ளது. அப்படி வளர்வது தான் அந்த கட்சியின் கடமையாக பார்க்கிறேன். 



 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அதிமுகவில் வளர்ச்சி பெற்ற வருவதாக இணையத்தில் பரவும் தகவல் குறித்த கேள்விக்கு

 

இணையத்தில் பரவும் எல்லா செய்திகளும் உண்மையாக இருப்பதில்லை. ஒரு சில செய்திகள் மட்டும் தான் உண்மையாக இருக்கிறது. இருந்த போதிலும் அதிமுகவில் நடப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

 

திராவிட மாடல் ஆட்சியில் கிராம சபைக் கூட்டம் தங்கு தடையின்றி நடைபெறுவதாக தமிழக முதல்வர் தெரிவித்தது குறித்த கேள்விக்கு

 

முதலமைச்சர் சொன்னது சரியான ஒன்று தான்.  கவர்னருக்காக அவ்வாறு தெரிவித்திருக்களாம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை, போதை கலாச்சாரம்,  மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சீர்கேடு உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது. அதேபோல் தேர்தல்களில் அறிவித்த வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் இருப்பது, சீர்கேடாக உள்ளது. ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஹிட்லர் ஆட்சி போல தான் ஸ்டாலின் அவர்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த திமுக ஆட்சிக்கு வரும் காலத்தில் மக்கள் முடுவுகட்டுவார்கள்.

 

தேர்தலில்  தோல்வியடைந்தாள் திமுக  மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திமுக தலைமை தெரிவித்துள்ளதாக வெளிவரும் தகவல் குறித்த கேள்விக்கு

 

தி.மு.க., 2014 தேர்தலில் ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை என நினைக்கிறேன். அப்போது அவர் பொறுப்பேற்று நீங்கி இருப்பாரா ? அவர்களால் ஒரு ஒன்றிய செயலாளர் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியாது.

 

தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு நல்லதில்லை என தெரிவிக்கப்படும் கருத்து குறித்த கேள்விக்கு

 

தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையான காவிரி பிரச்சினையை கூட தீர்க்கப்படவில்லை. கர்நாடகாவில் வன்முறை தூண்டப்படுகிறது.  இதே போல் தான் முல்லைபெரியாறு அணையிலும் பிரச்சினை எழுந்தது. அதனால் தேசிய கட்சிகளால் மாநிலங்களுக்கு பயனிள்ளை என்பது உறுதியாகிறது. மாநில கட்சிகள் வலுவாக இருந்தாள் தான் அந்ததந்த மாநில பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுய ஆட்சி என்பது தான் அண்ணாவின் கொள்ளை. எனவே அவ்வாறு இருந்தாள் தான் சரியாக இருக்கும்.



 

 

அதிமுக - பி.ஜே.பி., கூட்டணி பிரிவு காரணம் குறித்த கேள்விக்கு !

 

பாஜக - அதிமுகவை கைவிட்டால், அதிமுக சின்னாபின்னம் ஆகிவிடும். பழனிச்சாமி தனது தலையில் கொல்லிக்கட்டையை தேய்த்துக் கொண்டார்.  பழனிச்சாமி தனக்கு யார் உதவி செய்தாலும் அவர்களுக்கு நம்பிக்கையை துரோகம் செய்து தான் பழக்கம் கொண்டவர். தற்போது தனது ஆட்சியை காப்பாற்றிய பிஜேபிக்கு நன்றி கடன் செலுத்தி வருகிறார். அதிமுகவின் இரட்டை இலை என்றால் நெல்லிக்காய் போல ஓட்டு சிதறி விடும். நாங்கள் ஜனநாயக முறையில் போராடி வருகிறோம். ஏற்கனவே நாங்கள் சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் முன்னேறி இருப்போம். ஆனாலும் தற்போது நாங்கள் தோல்வியடைந்து வருவதை  பின்னடைவாக பார்க்கவில்லை. பயிற்சியாக தான் பார்க்கிறோம். வருங்காலங்களில் வெற்றி பெருவோம். குக்கர் சின்னத்தை வைத்து அதிமுகவை மீட்போம்.