திண்டுக்கல்: ABP- யின் புகார் பெட்டி எதிரொலி: 


திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல்லையும், வேடபட்டியையும் இணைக்கும் ஒற்றைக்கண் பாலம் சீரமைக்கப்படாததால் அப்பகுதியில் மழை பெய்யும் நேரங்களில் சாக்கடை கழிவுகள் தேங்குவதாகவும், தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருவதாகவும், மழை நீர் மற்றும் சாக்கடை கழிவு நீர் தேங்குவதால்  போக்குவரத்துக்கு கடுமையான இடையூறு ஏற்படுவதாக abp நாடுவின் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. 



இதையடுத்து சாலையில் மழைத்தண்ணீர் தனியாக செல்வதற்கு சுரங்கப்பாதை அமைத்து தருவதாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மேலும், மேயர், கவுன்சிலர்கள் ஒற்றைக்கண் பாலம் பகுதியில் ஆய்வு  மேற்கொண்டனர் .


Pugar Petti: ஓரங்கட்டப்பட்ட ஒற்றை கண் பாலம்; சீரமைக்கப்படாத சாலையால் தேங்கும் கழிவு நீர்: சின்னாபின்னமாகும் மக்கள்!




மழை காலம் முடிந்ததும் சுரங்க வேலையை ஆரம்பிப்பதாக கூறியுள்ளனர். மேலும் இதற்கான தொகையை திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்து ஒதுக்க வேண்டும் எனவும் அதன் பிறகு ரயில்வே வடிகால் சுரங்க பாதை பணியை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளனர்.


மேலும் திண்டுக்கல் மாநகராட்சி விரைவில் இதை செயல்படுத்தி கொடுக்க வேண்டுமென வேடப்பட்டி மக்களின் சார்பாக அதிகாரிகளிடம் கோரிக்கையும்  வைக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண