தமிழ்நாடு முழுவதிலும் 62 ஆயிரம் உறுப்பினர்களுக்கு கொண்ட நாடார் மகாஜன சங்க தேர்தல் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள எஸ்.வி.என் கல்லூரியில் இன்று காலை தொடங்கி நடைபெற்றுது. இந்த தேர்தலானது சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் மேற்பார்வையில் நடைபெற்றுவருகிறது.
இந்த தேர்தலில் மொத்தம் 62,169 நபர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் தலைவர் , துணைத் தலைவர் செயலாளர் , பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 144 நபர்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடார் மஹாஜன சங்கம், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிப் பேரவை மற்றும் காமராஜ் தொழில்நுட்பக் கல்லூரி பரிபாலன சபை உட்பட அனைத்து பதவிகளுக்குமான தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது.
மாலை 5 மணியுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்காளர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வாக்குச்சாவடி மையத்தில் காத்திருந்த வாக்காளர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு இறுதி வாக்காளர் வரை வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. 7.05 மணி அளவில் இறுதி வாக்காளர் வாக்கு செலுத்தி நாடார் மகாஜன சங்கத் தேர்தலில் வாக்குப்பதிவானது நிறைவு பெற்றது.
இந்த தேர்தலுக்காக 30 வாக்குச்சாவடி மையங்கள் வாக்குப்பதிவிற்காக அமைக்கப்பட்டுள்ளன வாக்கு எழுதுவதற்காக தனியாக மூன்று அரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பு கேமராக்களுடன் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் செலுத்தும் வாக்குச்சீட்டுகள் இயந்திரங்கள் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு அவற்றின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் 15,818 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மதுரையின் மற்ற செய்தி
பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை 3ரூபாயாக மட்டுமே உயர்த்தி அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது. தனியார் பால் நிறுவனங்களில் பால் விலையை அரசு கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் தலைவர் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.
மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டமானது நடைபெற்றது மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக அரசுக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மாநில தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ”தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை வெறும் 3 ரூபாயை மட்டும் என அவசரவசரமாக உயர்த்தி அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரை சந்தித்து பேச வேண்டுமென அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் கூறியுள்ளோம் ஆனால் இதுவரையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்