தேர்தல் களம்:
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் புதுவையில் உள்ள ஒரு தொகுதிக்கும் என 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கும் நேரம்த்தில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையில் ஈடுபட ஆயத்தம் அடைந்துள்ளதுடன் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு :
அந்த வகையில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் பாமக, அமமுக, புதிய நீதி கட்சி, தமாகா, தமிழர் மக்கள் முன்னேற்ற கழகம், ஐஜேகே, தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் உள்ளிட்டவை கூட்டணி அமைந்துள்ளன. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியை பொறுத்தவரையில் திருச்சி, தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் மேற்கண்ட இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்றைய தினம் டிடிவி தினகரன் அறிவித்தார்.
தேனியில் போட்டியிடும் டிடிவி தினகரன்:
தேனியில் டிடிவி தினகரனே போட்டியிடுகிறார். திருச்சியில் அமமுக மாவட்டச் செயலாளர் செந்தில் நாதன் போட்டியிடுகிறார். தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என நேற்றைய தினம் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அவரும் அவரது மகனும் கேட்டதற்கிணங்க டிடிவி தினகரன், தேனியில் போட்டியிடுகிறார். டிடிவி தினகரனுக்கு நன்றிக் கடனாக தேனியை கொடுத்தோம் என தெரிவித்திருந்தார்.அது போல் திருச்சியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமமுகவிலும் முக்கிய தலைவர்கள் யாரும் இல்லை என்றே கருதப்பட்ட நிலையில் இன்று தன்னுடன் சேர்த்து இரு வேட்பாளர்களை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
Delhi liquor Case: டெல்லியே அதிரும் மதுபான கொள்கை வழக்கு என்றால் என்ன? முதலமைச்சர் கைது ஏன்?
டிடிவிதினகரனின் தேனி அரசியல்:
தேனி தொகுதி டிடிவி தினகரனுக்கு நல்ல அறிமுகம் உள்ள தொகுதி. கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அவர் வென்றுள்ளார், 2004 ஆம் ஆண்டு அங்கு போட்டியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். அதுபோல் போடி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்றும் இருக்கிறார்கள். அதுபோல் டிடிவி தினகரன் முதன் முறையாக தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு இத்தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்தது அப்போதைய சூழலில் ஆனால் தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளின் நிலை மக்களின் மன நிலை யாருக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.