விலங்கினங்களில் மனிதனுடன் நெறுங்கிய தொடர்பில் உள்ளது நாய்.  ஒருவரை பார்த்து திட்டும் போது கூட நாய் போல் நன்றி இருக்க வேண்டுமென சொல்லும் வார்த்தை மனிதரை விட நாய்க்கு அதிக நன்றி விசுவாசம் இருப்பது பலரும் அறிவர். நாய்கள் குணங்களில் பல உண்டு  தன்னை வளர்த்தவர்களுக்கு நன்றி காட்டும் பல நாய்களின் கதைகளையும் அனைவரும் கேட்டறிவோம். அதுபோல பழங்கால புராண கதைகளிலும் நாய்களின் விசுவாசங்கள், பழங்கால ஜமீன்தார்களின்  கதைகளிலும் இந்த நாய்களின் நன்றியுணர்வை கூறப்படுகிறது.



ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை என பல்வேறு பெயர்கள் கொண்ட நாய் இனங்கள் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டும் வருகிறது.  வீட்டில் நாய்கள் வளர்ப்பதை பலர் ஆத்மார்த்தமாகவே செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியரான தாஸ் பெர்னான்டஸ் தன் வீட்டில் லேபர்டர் வகையை சேர்ந்த நான்கு வயதான ஜேக்ஸ் ஸ்பேரோ என்று பெயரிடப்பட்ட நாயை வளர்த்து வருகிறார். 



செல்லப்பிராணி ஜேக்ஸ் ஸ்பேரோ வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடைக்கு சென்று வாங்கி வருவது வாடிக்கையாக வைத்துள்ளது. வீட்டிற்கு தேவையான மளிகைபொருட்கள், காய்கறிகள், பால், சிக்கன், மட்டன் ஆகியவற்றை ஒரு சீட்டில் எழுதி சீட்டையும், பணத்தையும் ஒரு கூடையில் வைத்து நாயிடம் கொடுத்தால் கடைக்கு சென்று சரியான பொருட்கள் மற்றும் மீதி பணத்தையும்  வாங்கிவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


நாய் ஜேக்ஸ்பேரோ அடிக்கடி பொருட்கள் வாங்க வெளியே சென்று  வருவதால் அப்பகுதி மக்களிடம் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக தினமும் உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகளை வாங்கி வரும் ஜேக்ஸ் பேரோ, உழவர்சந்தை வியாபாரிகள் மற்றும்‌ பொதுமக்களுக்கு நல்ல நண்பனாக மாறிவருகிறது.



இந்த நாயின் செயலைக்கண்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த நாய் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த ஒரு பிடித்த செல்லப்பிராணியாகவும் வளம் வருகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


வீடியோ பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


நாங்க வேற மாதிரி.. கெத்து காட்டும் தேனி இளசுகள் | Theni | Jallikattu Vadam | Jallikattu |