மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் கடந்த 15-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நூலகத்திற்கு தொடர்ந்து பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் சென்று வருகின்றனர். காலை 8-மணி முதல் இரவு 8-மணி வரை நூலகம் செயல்பட்டு வருகிறது. நூலகம் திறந்து மறுநாளே 3648 நபர்கள் குறிப்பேட்டில் கையெழுத்திட்டனர்.


 





தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கலைஞர் நூலகத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது என தெரிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதே போல் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், போட்டோ, வீடியோ பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர். அதே போல் குழந்தைகள் பிரிவில் 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தான் அனுமதி எனவும் தெரிவித்துள்ளனர்.

 




இது குறித்து நூலகத்தில் இருந்த அதிகாரிகள் சிலர் நம்மிடம்..,” தொடர்ந்து சிலவாரங்கள் அதிகளவு பார்வையாளர்கள் வருவார்காள். தொடர்ந்து வாசிப்பை நேசிக்கும் நபர்களுக்கு அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். அப்போது தான் நூலகம் திறம்பட செயல்படும். நூலகத்தை அமைத்ததற்கான நோக்கம் நிறைவேறும். மக்களும் அதை உணர்ந்து சின்ன, சின்ன விசயங்களை பின்பற்றுவார்கள். தற்போது முதற்கட்டமாக சில குறிப்புகளுடன் நோட்டீஸ் ஒட்டியுள்ளோம் என தெரிவித்தனர்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 


 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண