சபரிமலை ஐயப்பன் கோவில் 2024ம் ஆண்டின் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி அதிகாலை திறக்கப்பட்டது. நவம்பர் 16ம் தேதி துவங்கி, டிசம்பர் 26ம் தேதி வரை மண்டல பூஜை நடைபெற உள்ளது. மண்டல பூஜையின் முதல் நாளில் இருந்தே சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.


வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக!




சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு


கடந்த சில நாட்களாக சபரிமலையில் பெய்த கனமழை காரணமாக கூட்டம் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருவதால் சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்ததை விட கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். திருவேணி முதல் பம்பை-நிலக்கல் செல்லும் இடத்தில் தான் அதிக கூட்ட நெரிசல் காணப்படுகிறது. பக்தர்களை ஏற்றி வந்த  பேருந்துகள் நீண்ட வரிசையில் பார்க்கிங்கிற்காக காத்திருக்கின்றன.


` Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!


பக்தர்களின் வசதிக்காக சபரிமலை உள்ளிட்ட 27 முக்கிய கோவில்களில் உடனடியாக சோலார் மின் விநியோக திட்டத்தை அமல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. தற்போது சபரி பீடம் வரை பல இடங்களில் தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தாகம் இன்றி வரிசையில் காத்திருக்க முடிகிறது.




சபரிமலையில் மண்டல காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் இதுவரை, 17 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மண்டலகாலம் துவங்கிய பின், 18 நாட்களில் 35,000 பேர் காட்டுப்பாதைகளில் சபரிமலை வந்துள்ளனர். வண்டிப்பெரியாறு, சத்திரம், புல் மேடு பாதை வழியாக 18,952 பேரும், எருமேலி, கரிமலை,- அழுதை, முக்குளி வழியாக 18,317 பக்தர்களும் வந்துள்ளனர்.


குறிப்பாக கனமழை காரணமாக டிச., 2, 3ல் இந்த இரு பாதைகளிலும் பக்தர்கள் செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. கடந்த இரு நாட்களாக சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை 17 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வரும்படியும், வர முடியாதவர்கள் தங்கள் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும் என தேவசம்போர்டும், கேரள போலீசாரும் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.


விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!


டிச. 11ல் பலத்த மழை எச்சரிக்கை


சபரிமலை மற்றும் பம்பை ஆகியன பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளன. குமுளி புல் மேடு பாதை மற்றும் எருமேலி, பெருவழி பாதையின் ஒரு பகுதி, இடுக்கி மாவட்டத்தில் வருகிறது. இந்த இரு மாவட்டங்களிலும் டிச., 11ல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு 64.5 முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.