தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட கைலாசபட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக பணி செய்து வருபவர் பார்த்திபன் (வயது 27) . இவரின் வீட்டின் அருகே வசித்து வருபவர் கருப்பையா. (வயது 55). ஆட்டோ ஓட்டுனரான பார்த்திபன் நாள் தோறும் மது போதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பேசி வருவதாக கூறப்படுகிறது.


இதனால், இதைத்தட்டி கேட்ட கருப்பையாவிற்கும் பார்த்திபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில்  நேற்று மாலை பார்த்திபன் வழக்கம் போல் மது போதையில்  கருப்பையா வீட்டின் முன்பாக நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசிய போது, கருப்பையா அதை தட்டிக் கேட்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.


Kottai Mariamman Temple: கோலாகலமாக நடைபெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. குவிந்த பக்தர்கள்..!




அதனைத் தொடர்ந்து கருப்பையாவின் மகன் முத்துப்பாண்டி மற்றும் மருமகன் ராஜவேல் ஆகிய மூவரும் சேர்ந்து பார்த்திபனை அரிவாள், கட்டை  உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் பார்த்திபன் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பார்த்திபனை மீட்டு பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் பார்த்திபன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.


CRIME : மாறுவேடமிட்ட அதிகாரிகள்..! விமான நிலைய ஊழியரே கருப்பு ஆடு.. கிலோ கணக்கில் பிடிக்கப்பட்ட தங்கம்..!




இதனை தொடர்ந்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பார்த்திபனை அரிவாளால் வெட்டி தாக்கி படுகொலை செய்த சம்பவத்தில் ஈடுபட்ட கருப்பையா தானாக முன்வந்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலும் அவரது மகன் முத்துப்பாண்டி மற்றும் மருமகன் ராஜவேல் ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்த படுகொலை சம்பந்தமாக பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.. பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு