மதுரையில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த 27 வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளைஞர் மகாலிங்கம். அப்பகுதியில் திருவிழாக்களுக்கு மை செட் அமைக்கும் வேலை செய்து வந்துள்ளார். அனைவரையும் கவரும் வகையில் பாடல்கள் போட்டு அசத்துவாராம். இதனால் இவரை பலரும் மைக் செட் மகாலிங்கம் என அழைப்பார்களலாம்.
இதனை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இவருக்கு கடந்த 2 வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த இளைஞரின் பெற்றோர் மகாலிங்கத்திற்கு உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்த நிலையில், சிறுமியுடன் அடிக்கடி செல்போனில் பேசியதால் கணவன் மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டு விவகாரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சிறுமியை மதுரை மேல அனுப்பானடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பெற்றோர் கடந்த மாதம் அனுப்பி வைத்திருந்த நிலையில், 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாகவும், தீவிரமாக காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மகாலிங்கம் சிறுமியை தெப்பக்குளம் பகுதிக்கு வரவைத்து சிறுமிக்கு தாலிகட்டி தேவகோட்டை அருகே வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், சிறுமியின் உறவினர்கள் தெப்பக்குளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தேவகோட்டை அருகே சிறுமியுடன் தங்கியிருந்த மகாலிங்கத்தை காவல்துறையினர் கைது செய்து மதுரை அழைத்து வந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
தொடர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததோடு, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதால் இளைஞர் மகாலிங்கம் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர், மேலும் 17 வயது சிறுமி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்... பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரிக்கும் சூழலில் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி சில ஏமாற்றி திருமணம் செய்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் சிறுமி தன்னுடைய வாழ்க்கையை இழக்கிறார். மேலும் உடல் அளவிலும், மனதிலும் மிகப்பெரும் பாதிப்பு அடைகிறார். எனவே இது போன்ற விசயங்களில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என தெரிவித்தனர்.
இதை மிஸ் பண்ணாம படிங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!