பட்டாசு ஆலை


விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் தட்பவெப்ப நிலையின் காரணமாக தொடர்ந்து இங்கு பட்டாசு ஆலைகள் அதிகளவில் செயல்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தரமாக இருக்கும் என்பதால் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  தீபாவளிக்கு அதிகமாக பயன்படுத்தும் பட்டாசுகள் இங்குதான் தயாரிக்கப்படுகிறது. 


விதி மீறல்கள்


உற்பத்தி அதிகரிக்க உற்பத்தியாளர்கள் விதிமுறைகளை மீறுவதாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் வரும் நிலையில் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மற்றும் வருவாய் துறை எனது தனிக்குழு அமைக்கப்பட்டு இந்த குழுக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் விருதுநகர் அருப்புக்கோட்டை சிவகாசி சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் என்பது மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

விபத்து


 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் திருத்தங்கல்லைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 50 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வழக்கம்போல் பட்டாசு தொழிலாளர்கள் பணியை துவங்கினர். பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தானது அடுத்தடுத்த அறைகளுக்கு பரவி மொத்தம் ஏழுக்கும் மேற்பட்ட அறைகள் சேதம் ஆயின. இடிபாடுகளுக்குள் சிக்கி  9 பேர் பலியாகினர். 11 பேர் காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

பட்டாசு ஆலை வெடி விபத்து-ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு


சிவகாசி அருகே செங்கமலப் பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்துள்ளனர் விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சரவணன், ஆலை ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணன், ஆலை மேற்பார்வையாளர்  ஆகிய 3 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு  ஏற்படுத்தியது, வெடி பொருட்களை முறையாக கையாளாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.




அமைச்சர் பேட்டி




 சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் கே.கே.எஸ்.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் அமைச்சர் அளித்த பேட்டி, “தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு இரு நாட்களில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படும். விபத்துக்கு காரணம் பேராசை. பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது. விதி மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 4-ஆம் தேதிக்கு பிறகு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.


- Vijayakanth Padma Bhushan: பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா