பத்மபூஷன் விருது வென்ற எட்டுத் தமிழர்கள்


மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. கலை இலக்கிய செயல்பாடுகள், அறிவியல் பங்களிப்பு , சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களை கெளரவிக்கும் விதமான பத்மபூஷன் விருது 1954 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசால் வழங்கப் பட்டு வருகிறது.


பாரத ரத்னா , பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை அடுத்து  இந்திய அரசின் மூன்றாவது  உயரிய விருதாக கருதப்படும் பத்மபூஷன் விருதினை இதற்கு முன்பாக சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் , ரஜினிகாந்த் உள்ளிட்ட பல தமிழ் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் பெற்றுள்ளார்கள்.   


2024 ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருது மொத்தம் எட்டு பேருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான வைஜயந்தி மாலா, பரதநாட்டிய கலைஞர் குரு பத்ம சுப்ரமணியம், கோயம்புத்தூரைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் பத்ரப்பன், ஸ்குவாஷ் விளையாட்டு வீரரான ஜோஸ்னா சின்னப்பா, நாதஸ்வர கலைஞர் டி.சிவலிங்கம், அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் ஜி நாச்சியார், இலக்கியத் துறையில் ஜோ டி குரூஸ் , மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்பட மொத்தம் எட்டு தமிழர்களுக்கு இந்த ஆண்டிற்கான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.


விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது






தேமுதிக தலைவர் மற்றும் நடிகரான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் களத்தில் மிகப்பெரிய இழப்பாக விஜயகாந்தின் மறைவு கருதப் படுகிறது.


அவரது உடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடன் நல்லடக்கம் செய்யப் பட்டது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று தினமும் அஞ்சலி செலுத்தியபடி இருக்கிறார்கள்.


விஜயகாந்தின் அரசியல் பணிகளை கெளரவிக்கும் வகையில் அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன்கள் டெல்லியில் பெற்றுக் கொண்டார்கள். ஜனாதிபதி திரெளபதி முர்மூர் இந்த விருதினை அனைவருக்கும் வழங்கினார்.