கொடைக்கானல் : 72.8 சதவீதம் பேர் செலுத்திக்கொண்ட தடுப்பூசி : கிராமப்பகுதியினர் காட்டும் ஆர்வம்..!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மட்டும் 72.8 சதவிகித பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக சுகாதார துறையினர் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிகம் ஆர்வம் காட்டி  வருகின்றனர், திண்டுக்கல் மாவட்டம் சுற்றுலா தலமான கொடைக்கானல் நகர் பகுதிகளில் 29,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இதில் 18 வயதுக்கு மேற்பட்ட  24,000 நபர்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகப்படியாக கொடைக்கானல் நகர் பகுதிகளில் 72.08 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

Continues below advertisement

மேலும் வரும் சில தினங்களில் 100 சதவிகிதம்  கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார், கொடைக்கானல் பகுதிக்கு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களிருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா வைரஸ்சின் அச்சமின்றி வந்து செல்வதற்குரிய இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார துறையினரால் கூறப்படுகிறது. மேலும் பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, கூக்கால், பூண்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட மலை கிராமங்களில் 50,000-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இதில் 10,000-க்கும் மேற்பட்டோர்க்கு  முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த மாதம் இறுதியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கூடுதல் கவனம் செலுத்தி  சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்தில் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இறப்புகள் தற்போது வரை எதும் ஏற்படவில்லை மேலும் கடந்த சனிக்கிழமை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆத்தூர் வட்டம் பெரும்பாறை கிராமத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில்  பேசிய அவர், “கொடைக்கானல் சுற்றுலா தலம் என்பதாலும் ,கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தொழில்புரிவோர் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதிகமான கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்படவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து இன்று மட்டும் 5,000 தடுப்பூசிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளன. விரைவில் 100 சதவிதம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதனால் சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வந்து செல்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளால் மீண்டும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களையும் , சுற்றுலா பயணிகளையும் அனுமதிக்க வழிவகை செய்யும் என சுற்றுலா துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள அனைவருக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது சுற்றுலா துறை நிர்வாகம். 

மேலும் படிக்க,

தேனி | தர்மாபுரி என்னும் "இராணுவ பேட்டை" : வியக்கவைக்கும் ஒரு அதிசய கிராமம்..!

முகப்பு செய்திகள் / மதுரை தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்த புள்ளிமான் கோம்பை நடுகற்கள்

Continues below advertisement
Sponsored Links by Taboola