பழனி கோயில் நிர்வாகத்தை கண்டித்து தேவஸ்தான அலுவலகம் முவஸ்தான நிர்வாகம் அடைக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேவஸ்தான நிர்வாகத்தின் நடவடிக்கையால் மக்களின் குடிநீர் தேவை மற்றும் சாக்கடை , சாலைகள் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி நகரின் வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக கூறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
பழனி கோயில் நிர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் - காரணம் என்ன?
நாகராஜ் | 06 Jul 2024 12:53 PM (IST)
பழனி மலை அடிவாரத்தில் உள்ள தேவஸ்தான அலுவலகம் முன்பு பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் 33 நகர மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனியில் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்