திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்குகள், குண்டர் தடுப்புச்சட்ட நடவடிக்கைகள், சாலை போக்குவரத்து விதிகள் மீறல் உள்ளிட்ட வழக்குகள் குறித்த புள்ளிவிவரங்களையும் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றத்தடுப்பு நடவடிக்கைகளையும் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். அதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சட்டம் ,ஒழுங்கை பாதுகாக்க குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்  மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.




அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை வழக்குகளில் 86 பேரும், 12 பாலியல் குற்றவாளிகள், 10 கொள்ளையர்கள், 17 போதை பொருள் கடத்தல்காரர்கள் என மொத்தம் 125 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் 2,554 பேர் மீது குற்ற விசாரணை முறை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 1,800 பேர் ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டது. அதை மீறி குற்றத்தில் ஈடுபட்ட 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சாலை விதிகளை மீறிய 8,99,78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்


அதில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 732 பேர், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 4,61,128 பேர் மீது வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களின், ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய 2,97,90 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 6 கோடியே 87 லட்சத்து 37 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் 226 கஞ்சா கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்மூலம் மாவட்டம் முழுவது 894 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.




’’கேரளாவை சேர்ந்த 5 பேருக்கு பட்டா வழங்கி தனியார் சோலார் மின் பவர் பிளான்ட் போட ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பது விசாரணை மூலம் அம்பலம்’


புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தல் தொடர்பாக 807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 833 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சத்து 87 ஆயிரத்து 927 மதிப்பில் 8 டன் 732 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர மாவட்டம் முழுவதும் காணாமல் போன 298 பேரில் 274 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய 284 பேர் கைது செய்யப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்