தேனி அருகே கொடுவிலார்பட்டியை அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் பிரசாத். இவரது மனைவி ஹேமா (29). இதில், சுந்தர் பிரசாத் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இதனால் ஹேமா தனது குடும்பத்துடன் போடி கிருஷ்ணாநகரில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹேமாவின் மாமியார் கொடுவிலார்பட்டியில் இறந்துவிட்டார்.


மாநிலங்களில் குடும்ப அரசியலை எதிர்த்து பாஜக போராடி வருகிறது - ஜே.பி.நட்டா


இதைத்தொடர்ந்து துக்க நிகழ்ச்சிக்காக ஹேமா தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கொடுவிலார்பட்டிக்கு சென்றுவிட்டார். இதற்கிடையே ஒருவாரத்திற்கு பிறகு அவர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 25½ பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல்  நிலையத்தில் புகார் செய்தார். இந்த நிலையில் சார்பு ஆய்வாளர் இத்ரிஸ்கான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.


விமான நிலையம் எதிர்ப்பு குரல்... பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாமல் போராடும் கிராம மக்கள்..!


TN Cabinet meeting: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செப்.26-இல் தமிழக அமைச்சரவை கூட்டம்..


இதையடுத்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிவகங்கை மாவட்டம் செம்பனூரை சேர்ந்த ஜேசு அருள் (34), தேனி அன்னஞ்சியை சேர்ந்த பாலகுருசாமி (68), ராஜேஷ்கண்ணா (44), தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45), சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (38) ஆகியோர் சேர்ந்து நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜேசு அருள், பாலகுருசாமி, செந்தில்குமார், தமிழ்செல்வன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ்கண்ணாவை தேடி வருகின்றனர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்