ராமநாதபுரம் மாவட்டம் பொக்கரனேந்தலைச் சோந்த வடிவேலு என்பவரது மனைவி, இணையதளம் மூலம் குறிப்பிட்ட நிறுவனத்தில் கடந்த 2020 அக்டோபா் முதல் நவம்பா் வரை தலைவலிக்கான மருந்துகளை வாங்கியுள்ளாா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு இணையதளம் மூலம் 12 லட்சம் பரிசு விழுந்திருப்பதாகத் தகவல் வந்துள்ளது. இதை உண்மை என நம்பிய அந்தப்பெண் தகவல் அளித்தவரை செல்போனில் தொடா்பு கொண்டு பரிசு விழுந்துள்ளது குறித்து விசாரித்துள்ளார்.




அப்போது பேசிய அடையாளம் தெரியாத நபா் பரிசை பெறுவதற்கு வரி உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்த கூறி வங்கி கணக்கையும் அனுப்பியுள்ளாா். அதனடிப்படையில், இதை நம்பிய அந்தப்பெண்  பல தவணைகளாக 4.27 லட்சத்தை அப்பெண் செலுத்தியுள்ளாா். ஆனால், பரிசுப்பணம் அவரது வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து கேட்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடா்பு கொண்டபோது அது அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இயங்கும் நுண் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் இணைய தளம் மூலம் பொருள் வாங்கியபோது பரிசு விழுந்திருப்பதாகக் கூறி 5க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் மோசடி நடந்திருப்பதாக புகாா்கள் அளித்து வழக்குப்பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



மோசடி கும்பலிடடம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பரமேஸ்வரி, தன்னை ஏமாற்றி பணம் பறித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இழந்த தொகையை மீட்டுத்தர வேண்டும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். அடிக்கடி தலையில் வலி ஏற்பட்டதால் துன்பம் அடைந்த அந்த பெண் ஆன்லைனில் தலைவலிக்கு மருந்து வாங்கி  நிவாரணம் தேடி வந்துள்ளார். ஆனால் ஆன்லைனில்  தலைவலிக்கு மருந்து வாங்கப் போக அதுவே பெரிய தலைவலியாக போகும் என்று அந்தப் பெண் கொஞ்சம்கூட எதிர் பார்த்திருக்கவில்லை.  எவ்வளவோ ஆன்லைனில் நடைபெறும் மோசடிகள் குறித்து காவல் துறையினர்  விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் கூட, இவர் போன்ற நபர்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர்.