1. மதுரை மீனாட்சியம்மன் மற்றும் உபகோவில்களின் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் உண்டியல் வருமானமாக 38லட்சத்து 62 ஆயிரத்து 507ரூபாயும், 408கிராம் தங்கம் மற்றும் 503 கிராம் வெள்ளி, 30 வெளிநாட்டு பணங்கள் கிடைத்துள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
2. மதுரை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்ட் திடிரென பழுது லிப்டில் சிக்கிய ரேசன்கடை ஊழியர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
3. மதுரை மலர்சந்தை மீண்டும் பழைய இடத்திலயே செயல்பட விரைவில் அனுமதி வழங்கப்படும் என, மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
4.மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று இறைச்சி விற்பனை மற்றும் ஆடு ,மாடு, வதை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
5. வைகை அணையை துார்வாரினால் கிடைக்கும் வண்டல் மண்ணை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு ரூ.197.83 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்தது. மதுரை மூத்த வழக்கறிஞர் ப.ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனு என்பது குறிப்பிடதக்கது.
6. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஜமீன் செங்கப்படையை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் தெய்வவெனுசியா, கோயில் விளக்கில் ஆடை பட்டதால் தீக்காயமுற்று இறந்தார். சிறுமி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளிக்கு ஏழு ஆண்டு சிறைதண்டனை வழங்கி ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
8. தஞ்சாவூரை சேர்ந்த ஜீவா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் " குறுவை சாகுபடி காப்பீடு திட்டத்தில் நெல், சிவகப்பு பீன்ஸ் பயிர்களை சேர்க்க வேண்டும்” என தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
9. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை 5-க்கும் மேற்பட்ட கடைகளை யானை சேதப்படுத்திவிட்டதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
10. தேனி மாவட்டத்தில் நேற்று மட்டும் 7 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43403ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 7 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42788-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 517 இருக்கிறது. இந்நிலையில் 98 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.