76- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 2023  பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட  சாதனை முயற்சி ஒயிலாட்டம் - மெய்சிலிர்க்க வைத்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்.

 

நாட்டின் 76-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை அண்ணாநகர் அம்பிகா கலைக்கல்லூரியில் (பி.எஸ்.என்.ஏ., எம்படிக் பைன் ஆர்ட்ஸ் அகாடமி ) என்ற தனியார் அமைப்பின் சார்பில் சாதனை ஒயிலாட்டம் நடைபெற்றது.  கல்லூரி வளாகத்தில் 76 வது சுதந்திர தினத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்திய வரைபடத்தின் நடுவே 76 என்ற எண் வடிவில்   2023 மாணவ மாணவிகள் , ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து ஒயிலாட்டம் ஆடினர்.

 




 

உற்சாக நடனம்:

 

மதுரை , தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் 2023 மாணவ மாணவியர்களும் கைகளில் மூவர்ணங்களில் உள்ள துணிகளை கையில் வைத்தபடி என் நாடு என் சுதந்திரம் என்ற கிராமிய பாடலுக்கு ஏற்றவாறு உற்சாகமாக ஒயிலாட்டம் ஆடினர். 3 வயது குழந்தைகள் தொடங்கி 15 வயது மாணவ மாணவியர்கள் வரை பாடலுக்கு ஏற்ப சுதந்திரத்தை போற்றும் வகையிலும் ஒயிலாட்டம் ஆடியபடி உலக சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.



 

இசைக்கேற்ப ஒயிலாட்டம்:

 

இதனிடையே கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் காளம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் ராஷினி என்ற 10 வயது மாணவி கால்களில் செருப்பாணி அணிந்தபடியும், குடத்தின் மேல் ஆடுவது என பல்வேறு வகையான வகையில் தொடர்ச்சியாக தலையில் கரகம் வைத்தபடி கரகாட்டம் ஆடி உலக சாதனை படைத்தார். இதேபோன்று  காளம்பாளையத்தை சேர்ந்த ஆகாஷ் (8) என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் இடுப்பில் ஒரு நிமிடத்தில் 220 முறை வளையத்தை சுற்றி சாதனை நிகழ்த்தினார்.

 

சுதந்திர தின பாடலுக்கு ஏற்ப மாணவ மாணவியர்கள் ஒயிலாட்டாம் ஆடியது நிகழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுதந்திர ஒயிலாட்டம் என்ற சிறப்பு பாடல் ( Album song ) வெளியிடப்பட்டதோடு  சாதனை முயற்சிக்கான சான்று மற்றும் விருது வழங்கப்பட்டது. இதில் பாடகம் மதிச்சியம் பாலா மற்றும் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாக சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவ மாணவியர்கள் அடுத்தடுத்த ஒலிபரப்பபட்ட பாடல்களுக்கு ஏற்ப உற்சாகமாக ஒயிலாட்டம் ஆடினர்.

 



 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண