இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதன்படி கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன - தொடர்ந்து மழை பெய்தால் அழுகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி, போத்தம்பட்டி, செல்லம்பட்டி, நாட்டாமங்கலம், மாதரை, முத்துப்பாண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்., இந்நிலையில் கடந்த சில நாட்களாக உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை பெய்து வருகிறது, அவ்வப்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நல்லுத்தேவன்பட்டி, போத்தம்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2 ஏக்கர் கரும்புகள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.
அடுத்தடுத்து மழைக்காலம் உள்ள சூழலில் கனமழையால் சாய்ந்த கரும்புகள் விளைநிலத்திலேயே அழுகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும்., ஒவ்வொரு ஏக்கருக்கும் 20 ஆயிரம் 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மேலும் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
MADURAI RAINFALL REPORT
District : Madurai
Date : 05/11/2023
Total No.of Rainguage Stations -- 22.
District Rainfall in mm - 569.90
Average Rainfall in mm - 25.90
1) Airport Madurai -- 7.20
2) Viraganur -- 5.20
3) Madurai North - 21.20
4) Chittampatti -- 55.80
5) Idayapatti -- 8.60
6) Kallandiri -- 13.00
7) Tallakulam -- 31.00
8) Melur -- 2.00
9) Pulipatti -- 71.40
10) Thaniyamangalam -- 3.00
11)Sathiyar dam -- 29.80
12)Mettupatti --- 35.60
13)Andipatti -- 82.60
14)Sholavandhan -- 40.70
15)Vadipatti -- 21.00
16)Usilampatti -- 8.00
17)Kuppanampatti -- 13.60
18)Kalligudi -- 32.60
19)Tirumangalam -- 19.40
20)Peraiyur -- 1.60
21)Elumalai -- 38.20
22)Periyapatti -- 28.40
RESERVOIR POSITION
TOTAL FEET 152.00 ft
PERIYAR DAM 125.50 ft
STORAGE 3726 Mcft
INFLOW 1616 C/s
DISCHARGE 105 C/s
TOTAL FEET 71.00 ft
VAIGAI DAM 66.31 ft
STORAGE 4924 Mcft
INFLOW 3177 C/s
DISCHARGE 69 C/s
TOTAL FEET 29.00 ft
SATHIYAR DAM 25.50 ft
STORAGE 28.34 Mcft
INFLOW 25 C/s
DISCHARGE 0 C/s