தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 353 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 13 ஆயிரத்து 432 மாணவர்கள், 12 ஆயிரத்து 508 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 940 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 357 மாணவர்கள், 11 ஆயிரத்து 872 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 229 பேர் தேர்வு எழுதினர்.
தேனி : மாவட்டம் முழுவதும் இன்று 12-ஆம் வகுப்பு தேர்வெழுதிய 14,082 மாணவர்கள்
1,075 மாணவர்கள், 636 மாணவிகள் என 1,711 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க பறக்கும் படையினர், தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நிலைக்குழுவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதே போல் தேனி மாவட்டத்தில் 203 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 611 மாணவர்கள், 7 ஆயிரத்து 692 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 303 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்றிருந்தனர். இவர்களுக்காக மாவட்டத்தில் மொத்தம் 66 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
கல்வி மாவட்டம் வாரியாக தேனியில் 22 மையங்கள், பெரியகுளத்தில் 17 மையங்கள், உத்தமபாளையத்தில் 27 மையங்கள் அமைக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை 7 ஆயிரத்து 935 மாணவர்கள், 7 ஆயிரத்து 319 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 254 பேர் எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 1,049 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும், கண்காணிக்கவும் ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்