மதுரை மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உசிலம்பட்டி அருகே உள்ள கொடிக்குளம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சத்திற்காக பரிசு காசோலையை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மதுரை மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் இணைந்து கொடிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா -விடம் வழங்கினர்.






தொடர்ந்து இந்த ஊராட்சியில் உள்ள சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 100 பெண்களுக்கு தலா 20 ஆயிரம் வீதம் 20 லட்சம் கடனுதவியுடன் வழங்கப்பட்டது., பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்., மதுரை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக உள்ள கிராமமாக கொடிக்குளம் ஊராட்சி தேர்வுசெய்யப்பட்டதை அடுத்து 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளோம்., இந்த 10 லட்சத்தை கிராமத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.,  உண்மையிலேயே எடுத்துக்காட்டாக உள்ள இந்த கிராமத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.,



 

ஒவ்வொரு ஆண்டும் இது போன்று ஒற்றுமையாக உள்ள கிராமத்தை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் போது மற்ற கிராமங்களும் மாறும்.,  நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் எல்லா சமுதாயமும் ஒற்றுமையாக இருந்து சட்ட ஒழுங்கை பாதுகாத்தால் மட்டுமே எந்த ஒருநாடும் வளர்ச்சியடைய முடியும்.



 




அதே போன்று சாதி பாகுபாடு இல்லாத ஒரு மாவட்டமாக மதுரையை உருவாக்குவதற்கு தான் இது போன்று முயற்சிகளை செய்கிறோம். தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவோம், பிரச்னைக்குரிய ஒரு சில கிராமங்கள் உள்ளன அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் என பேட்டியளித்தார்.