வருவாய்த்துறையில் வேலைபார்க்க விருப்பமுள்ளவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு , குறைந்தபட்ச கல்வித்தகுதி போதுமானது. மேலும் உங்கள் சொந்த ஊருக்கு அருகிலே வேலை செய்ய வாய்ப்பு.
விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
தேனி மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.05.2022-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கிராம உதவியாளர் (Village Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை :- 6
கல்வித் தகுதி :-01.07.2021 அன்று, 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :- ரூ 11,100 – 35,100
வயதுத் தகுதி : 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் அரசு விதிகளின் படி, SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், BC/MBC/DNC பிரிவுகளுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2022/04/2022042654.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தேனி
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.05.2022
வேலை வாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக முழு விபரங்களை தெரிந்துகொள்ள
https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2022/04/2022042654.pdf லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.