கேரள மாநில மக்களில் 90 % பேர் கல்வி அறிவுடன் இருப்பதால் அம்மாநிலத்தில் பாஜக வளர்ச்சியடைய சிரமமாக இருப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஓ. ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். 


ஊடகம் ஒன்றிற்கு பேசிய அவர், கேரளாவில்  பெரும்பாலான மக்கள் கல்வி அறிவுடன் உள்ளதால், நாட்டு நடப்புகள் குறித்து சிந்தித்து தங்களுக்குள் விவாதிக்கிறார்கள் எனத் தெரிவித்தார். இது கேரளாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக தெரிவித்த அவர், இந்துக்கள் கேரளாவில் 55 % மட்டுமே உள்ளதும் கூட கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதென குறிப்பிட்டார்.