காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,சென்னை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்றைய வானிலை நிலவரம் எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்வோம்.


இன்றைய வானிலை நிலவரம் 


தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு கழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14-ஆம் தேதி தெற்ற வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். வரும் 15, 16 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும்.


13.10.2024:


தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.தஞ்சாவூர். நிருவாரூர், மதுரை, தேனி மற்றும் விதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர். பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி கரூர் கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை நாகப்பட்டினம். சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமமையும் பெய்யவாய்ப்புள்ளது.


காஞ்சிபுரம் மாவட்ட நிலவரம் என்ன ?


காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் மற்றும் மாலை வேலை மிதமான மழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று இரவு நேரங்களிலும் காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை வானிலை நிலவரம் 


அடுத்த 24 மணி நேரத்திற்குவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இயக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது 


செங்கல்பட்டு மாவட்டம் 


செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் காலை வேலைகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை வேலைகளில் செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் செய்யூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


திருவண்ணாமலை மாவட்ட நிலவரம் என்ன ?


திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை வந்தவாசி, செய்யார், ஆரணி ஆகிய பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் மாலை வேலைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளைய வானிலை நிலவரம் 


தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஐடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளைய மறுநாள் வானிலை நிலவரம் 


வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்புெரம், செங்கல்பட்டு இராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ரோடு, அரியலூர்,பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.